ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சோம்பல்

நீல வண்ணச் சிறகுடைய அழகிய வானம்பாடி ஒன்று ஆடிப் பாடித் திரிந்து பறந்து கொண்டிருந்தது.

News image
Updated On :25 டிசம்பர் 2015, 1:08 pm

நெ. இராமன்

நீல வண்ணச் சிறகுடைய அழகிய வானம்பாடி ஒன்று ஆடிப் பாடித் திரிந்து பறந்து கொண்டிருந்தது. அதன் நீல நிற இறகு மிகுந்த அழகாக இருந்தது! அதன் குரலும்தான்! வானம்பாடியை காட்டிலுள்ள அனைத்து மிருகங்களும் அதன் அழகையும் குரலையும் புகழ்ந்து பேசின.

ஒரு நாள் அதற்கு உணவே கிடைக்கவில்லை. அப்போது தொப்பி அணிந்த ஒரு சிறுவன் கையில் சிறுபையுடன் நடந்து வந்துகொண்டிருந்தான். பையில் தானியங்கள் இருந்தன. சிறுவனைக் கண்ட வானம்பாடி, ""பையில் என்ன வைத்திருக்கிறாய்?'' என்று கேட்டது. ""மூக்குக் கடலை'' என்று பையைத் திறந்து காட்டினான். அதுவும் அந்த நீல வண்ண வானம்பாடிக்குப் பிடித்த மூக்குக் கடலை! வானம்பாடிக்கு நாக்கில் எச்சில் ஊறத் தொடங்கியது.

""அதை எங்கே எடுத்துப் போகிறாய்?''

""சந்தையில் கொடுத்துவிடுவேன்...,அதற்கு பதில் உன் போன்ற வானம்பாடியின் சிறகினைப் பெற்றுக் கொள்ளுவேன்...,அதை என் தொப்பியில் அணிந்து கொள்வேன்''

""அப்படியா...! நீ எனக்கு கொண்டைக் கடலைகளைத் தருவாயானால் இங்கேயே இப்போதே நான் உனக்கு என் சிறகைத் தருவேன்...''

""அப்ப சரி! இந்தா எடுத்துக்கொள்''

கொண்டைக்கடலையைச் சாப்பிட்டுவிட்டு ஒரு இறகை அன்பளிப்பாகக் கொடுத்தது வானம்பாடி! சிறுவனும் இறகைத் தன் தொப்பியில் அணிந்து கொண்டான்.

தினமும் வானம்பாடி கடலையைக் கொறிப்பதும்....,அதற்கு பதில் சிறகினைக் கொடுப்பதும் வாடிக்கையாகிப் போனது!

வானம்பாடி சோம்பேறியாகிவிட்டது! அதனால் இரை தேட முடியவில்லை! ஆகாரத்திற்கு சிறுவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அதுமட்டுமல்ல...,அதனுடைய அழகிய நீலநிறச் சிறகுகளும் குறைந்து போய்விட்டன. காட்டு விலங்குகளும் இகழ ஆரம்பித்தன.

இப்போது அதற்குச் சிறகுகளே இல்லை! அசிங்கமாக இருந்த அதை சிறுவனும் பார்க்க விரும்பவில்லை!

இப்போதெல்லாம் சிறுவன் காட்டிற்குச் செல்வதே இல்லை! எனவே வானம்பாடி பசியால் வாட ஆரம்பித்தது! மெல்லச் சென்று உணவைத் தேட ஆரம்பித்தது! அறுவடைக்குப் பிறகு எஞ்சி இருந்த தானியங்களை உண்டு பசி ஆறியது. மெல்லச் சிறகுகள் வளர ஆரம்பித்தது. இப்போதெல்லாம் அது சுறுசுறுப்பாக இருக்கிறது. பழையபடி ஆடிப்பாடித் திரிந்தது!

ஒரு நாள் அந்தத் தொப்பிக் காரச் சிறுவன் வசிக்கும் குடிசைக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது சிறுவனைப் பார்த்துவிட்டது! சிறுவனும் பறவையை அடையாளம் கண்டு கொண்டான்! குடியைக்குள் சென்று சிறிது கொண்டைக் கடலைகளைக் கொண்டு வந்தான்.

வானம்பாடி அலட்சியமாய், " வேண்டாம்...,எனக்கு என் உணவைத் தேடும் சுறுசுறுப்பு வந்து விட்டது! அது போதும்!'' என்று கூறிவிட்டு மகிழ்ச்சியாகப் பறந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.