வாங்க! வாங்க!
சுப்பன் பணி புரியும் பண்ணை அந்த வட்டாரத்திலேயே பெரியது. பண்ணையார் உல்லாசப்பிரியர். வருமானத்திற்கு அதிகமாகச் செலவு செய்ததால் விவசாயத்திற்கு செலவு செய்ய முடியவில்லை! சில விளை நிலங்களை தரிசாகப் போட்டுவிட்டார்.


சுப்பன் பணி புரியும் பண்ணை அந்த வட்டாரத்திலேயே பெரியது. பண்ணையார் உல்லாசப்பிரியர். வருமானத்திற்கு அதிகமாகச் செலவு செய்ததால் விவசாயத்திற்கு செலவு செய்ய முடியவில்லை! சில விளை நிலங்களை தரிசாகப் போட்டுவிட்டார்.
சுப்பன் அவரை அணுகி ஒரு வேண்டுகோள் விடுத்தான். பண்ணையார் விவசாயம் செய்யாமல் தரிசாகக் கிடக்கும் நிலங்களை சுப்பன் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வது ஒவ்வொரு அறுவடையிலும் பாதி விளைச்சலை முதலாளிக்கு கொடுத்துவிடுவது என்பதுதான் அது.
உழவு செய்வது, நாற்று நடுவது, உரம் போடுவது, பூச்சி மருந்து அடிப்பது, அறுவடை செய்வது எல்லாவற்றுக்கும் சுப்பன்தான் செலவு செய்ய வேண்டும்.
சுப்பனும் அவன் மனைவியும் கடினமாக உழைத்தார்கள்! வழக்கத்துக்கு மாறாக அதே நிலங்கள் அதிக பலனைத் தந்தன!
பண்ணையாரின் செல்வம் அவரது உல்லாசத்தினால் வெகுவாகக் குறைந்து விட்டது! நிலங்களைப் பயிரிட முடியாமல் போய்விட்டது! அந்த தரிசு நிலங்களையும் சுப்பன் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தான். சுப்பனுக்கு வங்கியில் பணச்சேமிப்பும் பெருகியது!
ஒரு நாள் பண்ணையார் சுப்பனை அழைத்து, ""இந்த அறுவடை முடிந்ததும் நிலங்களையெல்லாம் என்னிடம் ஒப்படைத்து விடவேண்டும்.இனி குத்தகை உரிமை உனக்குக் கிடையாது!'' என்றார்.
சுப்பன் அதிர்ந்து, ""ஐயா, நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே...,ஒப்பந்தப்படி பாதி விளைச்சலை உங்களுக்கு சரியாகக் கொடுத்துவிடுகிறோமே'' என்றான்.
""உன் மேல் எந்தத் தப்பும் இல்லே..., தப்பு என் மேல்தான். என்னால சமாளிக்க முடியலே.எல்லா நிலத்தையும் வித்துடலாம்னு இருக்கேன். விலை பேசிக்கிட்டு இருக்கேன். குத்தகை எல்லாவற்றையும் பைசல் பண்ணாத்தான் வாங்குவாங்க''என்றார் பண்ணையார்.
சுப்பன் மனைவியுடன் கலந்து பேசினான்.
""என்னப்பா ரகசிய ஆலோசனை?''
""என் மனைவி ஒரு யோசனை சொன்னா..., அதை உங்ககிட்டே சொல்ல பயமாயிருக்கு''
""பயப்பட வேண்டாம். தைரியமாச் சொல்லு''
""முதலாளிக்கு ஆட்சேபணை இல்லேன்னா நாங்களே எல்லா நிலத்தையும் வாங்கிக்கிறோம்''
பண்ணையார் ஆச்சரியத்துடன்,""அவ்வளவு பணம் உனக்கு எப்படிக் கிடைத்தது?''
""எல்லாம் இந்த பூமித்தாய் கொடுத்ததுதான்..., நானும் என் மனைவியும் பாடுபட்டோம். பலன் கிடைத்தது''
""அது சரி, நான் சொந்த விவசாயம் பண்ணும்போது வராத விளைச்சல் உனக்கு மட்டும் எப்படி அதிகமாகக் கிடைத்தது?''
""நீங்க போன்னு சொன்னீங்க..., நான் வான்னு சொன்னேன். அவ்வளவுதான்''
""இதென்ன கூத்து? நான் யாரையும் போன்னு சொன்னது கிடையாது..., யார் வந்தாலும் வாங்க, வாங்கன்னு சொல்லி உபசாரம்தான் பண்ணியிருக்கேன்.''
""அப்படி அர்த்தமில்லே முதலாளி..., நான் விளக்கமாகச் சொல்றேன்..., நீங்க வேலைக்காரங்களைப் பார்த்து நீ அந்த வயலுக்குப் போ! உழவு செய்...,நீ போ! களையெடு...,நீ போ! உரம் போடு, என்று ஒவ்வொருவருக்கும் உத்தரவு போட்டு
விட்டு வீட்டிலே இருப்பீங்க, வேலைக்காரங்க எல்லாம் எப்படி வேலை செய்யறாங்கன்னு தெரியாது,நான் அப்படி இல்லே, வாங்க! வயலுக்கு உழவுக்கு, வாங்க களையெடுக்க, உரம் போட வாங்கன்னு கூட்டிக்கிட்டு போவேன். நானே வயலில் இறங்கி வேலையை ஆரம்பிப்பேன். என்னுடைய பார்வைக்குத் தப்பி யாரும் சோம்பேறித்தனமா நேரத்தை வீணடிக்க முடியாது. செல்வமும் என்கிட்டே வந்திச்சு.''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...