விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அத்தை!

மூங்கில் அடர்ந்திருந்த அத்தையின் தோட்ட வீட்டிற்குச் சென்றான் வேலு.

News image
Updated On :20 ஜூன் 2015, 12:59 pm

சுமன்

மூங்கில் அடர்ந்திருந்த அத்தையின் தோட்ட வீட்டிற்குச் சென்றான் வேலு.

""அத்தை! அத்தை!'' என்று கூப்பிட்டான்.

""என்ன வேண்டும்?'' என்று கேட்டாள் அத்தை.

""ஒரு கூடை வேண்டும்''

""இப்போது என்னிடம் இல்லையே''

""நாளை காலை தோட்டத்தில் பழங்கள் பறித்து வரலாம் என்றிருக்கிறேன். சரி, பரவாயில்லை. நான் சமாளித்துக் கொள்கிறேன். எனக்கு கொஞ்சம் தண்ணீர் வேண்டும்''

""உள்ள போய் எடுத்துக் குடியேன்.''

""சரி'' என்று கூறிவிட்டு உள்ளே சென்று தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்புகிறான்.

""நீ நாளை வா. கூடை தயாராக இருக்கும்''என்றாள் அத்தை.

வேலுவிற்கு ஆச்சரியமாய் இருந்தது. "எப்படி இவளால் முடியும்? உள்ளே நிச்சயமாய்க் கூடை இல்லை. சரி, நாளை வந்துதான் பார்ப்போமே... இல்லையென்றால் கடைத்தெருவிற்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம்.' என்று எண்ணியவாறே சென்றான்.

மறுநாள்...

அத்தை நான்கு கூடைகள் பின்னிக்கொண்டிருந்தாள்.

அருகிலுள்ள மூங்கில்புதர்களில் இரண்டு மூங்கில்கள் வெட்டப்பட்டிருந்தன.

வேலுவிற்குப் புரிந்து விட்டது! மூங்கில்களை வெட்டி பத்தைபோட்டுப் பின்னியிருக்கிறாள்.

தோட்டத்திலிருந்து வரும்போது அத்தைக்கு நிறைய பழங்கள் கொண்டுவரவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அத்தையின் உழைப்பை மனத்திற்குள் நினைத்து அன்பும் மரியாதையும் கொண்டான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.