/

எங்கள் பாப்பா!

தத்தித் தத்தி தவழும் பாப்பாதாவித் தாவிக் கண்டதைக் கேட்பாமுத்தம் தந்தா முகத்தைச் சுழிப்பாமுக்கி முனகி தினமும் குளிப்பா!

News image
Updated On :30 மே 2015, 9:56 am

ரமண ராஜசேகர்

தத்தித் தத்தி தவழும் பாப்பா

தாவித் தாவிக் கண்டதைக் கேட்பா

முத்தம் தந்தா முகத்தைச் சுழிப்பா

முக்கி முனகி தினமும் குளிப்பா!

தவழ்ந்து தவழ்ந்து தரையில் கிடப்பாள்

தங்கக் கையால் திரையைப் பிடிப்பாள்!

உவந்து உவந்து அள்ளி எடுத்தால்

உமிழ்நீர் சிந்தி முத்தம் கொடுப்பாள்!

சுட்டிக் குட்டிப் பாப்பா எழுவாள்

சோறு தந்தா சிந்தித் தின்பாள்!

தொட்டில் கட்டி போட்டால் சிரிப்பாள்!

தூங்கி எழுந்து ஜோரா விழிப்பாள்!

எட்டி எட்டி எல்லாம் எடுப்பாள்

எதையும் வாயில் வைத்தே ருசிப்பாள்!

கட்டிப் போட்டா கதறி அழுவாள்

கையைப் பிடித்துக் கொண்டு நடப்பாள்!

அழுது அழுது எல்லாம் கேட்பாள்

அம்மா தந்த பாலைக் குடிப்பாள்!

நிலவைக் காட்டி சோறு ஊட்ட

நித்திரை கண்டு தோளில் படுப்பாள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.