/

கதைப்பாடல்: ஓவியர் ரவிவர்மா!

ஓவியர் என்றால் ரவிவர்மா! -நம் உள்ளத்தில் அவரே புவி பிரம்மா!

News image
Updated On :17 அக்டோபர் 2015, 10:20 am

ரமண ராஜசேகர்

ஓவியர் என்றால் ரவிவர்மா! -நம்

உள்ளத்தில் அவரே புவி பிரம்மா!

தேவியை வரைந்தார்! அருள் தருதே!-பல

தெய்வங்கள் அவரால் உயிர்பெறுதே!

பாரதக் கதைகளை வரைந்தாரே!-அதை

பாரோர் புகழ உயர்ந்தாரே!

ஊரை மயக்கிடும் ஓவியம்தான்!-அவர்

உலகுக்குத் தந்தது காவியம்தான்!

இந்திய ஓவியம் வரைந்தாரே!-நம்

இதயத்தில் வண்ணத்தைக் குழைத்தாரே!

அந்நிய நாடும் போற்றுது பார்!-அவர்

அழகிய சித்திரம் பேசுது பார்!

சிறுவரும் அறிவர் அவர் பெயரை!-அவர்

சித்திரம் போக்குது நம் துயரை!

திறமையால் உயர்ந்தார் ரவிவர்மா!-அவர்

சித்திரங்கள் போலே இனி வருமா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.