எங்கள் வேலை!
ஓர் ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவனிடம் வெளியில் சென்று வர ஓரு பல்லக்கு இருந்தது. பல்லக்கு தூக்க சில ஆட்களையும் வேலைக்கு வைத்திருந்தான்.


ஓர் ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவனிடம் வெளியில் சென்று வர ஓரு பல்லக்கு இருந்தது. பல்லக்கு தூக்க சில ஆட்களையும் வேலைக்கு வைத்திருந்தான்.
அந்த செல்வந்தன் ஒரு விலையுயர்ந்த நாயையும் வளர்த்து வந்தான். அதுவும் அவனிடம் அன்படனும், நன்றியுடனும் பழகியது. சில சமயம் அது பல்லக்கில் செல்வந்தன் செல்லும்போது கூடவே செல்லும். அவனும் அதனிடம் அன்பு பாராட்டி வளர்த்து வந்தான்.
ஒரு நாள் திடீரென்று அந்த நாய் காணாமல் போய் விட்டது! வீடு, தோட்டம் எங்கும் தேடினான். அந்த நாய் கிடைக்கவே இல்லை.
செல்வந்தன் பல்லக்குத் தூக்கும் ஆட்களைக் கூப்பிட்டு,""நேற்று நான் வெளியில் செல்லும்போது ஒருவேளை நாய் கூடவே வந்திருக்கும்...,அதை ஊரெங்கும் சுற்றித் தேடிப்பாருங்கள்.'' என்றான்.
ஆனால் பல்லக்குத் தூக்கும் ஆட்களோ, ""பல்லக்குத் தூக்குவது மட்டும்தான் எங்களது வேலை. நாயைத் தேடுவது அல்ல. அதற்கு வேறு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்'' என்றனர்.
செல்வந்தன் உடனே பல்லக்கில் ஏறி அமர்ந்து, ""சரி நீங்கள் பல்லக்கே தூக்குங்கள். நான் நாயைத் தேடுகிறேன்'' என்றான்.
செல்வந்தனைச் சுமந்துகொண்டு ஊரெங்கும் அலைந்தனர் அந்த ஆட்கள். நாய் கிடைத்த பாடில்லை! அப்போது அவர்கள், ""சுமப்பதைவிட சுற்றுவதே மேல்'' என்று உணர்ந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...