விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மரங்களே வரங்கள்!

மரங்கள் எத்தனை வகையாகும்! - அவைமாபெரும் உலகுக்கு வரமாகும்!

News image
Updated On :23 டிசம்பர் 2017, 6:46 am

ரமண ராஜசேகர்

மரங்கள் எத்தனை வகையாகும்! - அவை
மாபெரும் உலகுக்கு வரமாகும்!
இறைவனின் படைப்பில் உன்னதமாம்! - அது
இயற்கை வளம் தரும் அற்புதமாம்!

உலகத்தில் மரங்கள் பலகோடி! - அவை 
உயிர்களின் வளர்ச்சிக்கு உயிர்நாடி!
அழகாய் பெரிதாய் வளர்ந்திடுமே!
அது பறவைகள் வாழ்ந்திட இடம் தருமே!

மரங்களின் அழகே கிளைகள்தான்! -அவை
மனதினை மயக்கிடும் சிலைகள்தான்!
கரங்கள் போன்றே விரிந்திருக்கும்! - அதில்
இலையுடன் மலர்கள் பூத்திருக்கும்!

காய், கனி தருவதும் மரங்கள்தான்! - இதைக்
காத்திட நாம் மறக்கலாமோ! 
தாய்போல் நேசிக்க வேண்டுமடா! - மரம்
சுவாசக் காற்றைத் தூண்டுமடா!

தாவரம் உலகுக்கு ஆதாரம்! - இதை
தருகின்ற மரங்களோ தாயாகும்!
யாவரும் பசுமையைக் காப்போமே! - நாம் 
இறைவனின் வரத்தைப் பெறுவோமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.