விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரங்கம்: மாற்றம் வரும்!

விண்ணப்பம்.. எங்க பெற்றோர் கையொப்பமும் இருக்கு. நாங்க வேற பள்ளிக்குப் போறோம்

News image
Updated On :10 மார்ச் 2017, 6:30 pm

பூதலூர் முத்து

காட்சி - 1

இடம்: பள்ளி
மாந்தர்: தலைமை ஆசிரியர் வளவன், 
மாணவர்கள்.

(பள்ளி முடிந்ததும்.. ஒன்பதாம் வகுப்பு மணிமாறனும் அவனுடைய நண்பர்களும் வளவனைச் சந்திக்கிறார்கள்)
வளவன்: வாங்க.. என்ன விஷயம்?
மகேஷ்: சார்.. எங்க அஞ்சு பேருக்கும் டி.சி கொடுங்க.. இந்தாங்க.. அதுக்கான விண்ணப்பம்.. எங்க பெற்றோர் கையொப்பமும் இருக்கு. நாங்க வேற பள்ளிக்குப் போறோம்..
வளவன்: (வியப்புடன்) அரையாண்டுத் தேர்வு வரப்போவுது.. இப்போ எதுக்கு டி.சி.. இந்தப் பள்ளியிலே உங்களுக்கு என்ன பிரச்னை?
பழனி: இந்த வேலப்பனும்.. அவனோட நண்பர்களும் கொடுக்கிற தொல்லை.. எல்லை மீறிப்போச்சு..
... மணிமாறன் உங்களிடம் அனுமதி வாங்கின பின்னால.. நேத்து நாங்க வேப்பங்கன்றுகளை நட்டோம்.. இன்னிக்கி அங்கே ஒரு செடி கூட இல்லே.
வளவன்: இதுக்கு அவங்கதான் காரணம்னு எப்படித் தெரியும்?
மகேஷ்: எங்களோடு சேர்ந்து கன்றுகளை வைச்ச மணிவேலனும் பெருமாளும் சொன்னாங்க... போய்க் கேட்டோம்... நாங்க ஓடி விளையாட இடைஞ்சலா இருக்கு.. பிடுங்கிப் போட்டோம்னு சொல்றாங்க..
பழனி: விளையாடப் பெரிய திடல் இருக்கு.. இங்கேதான் ஓடணுமா?
வளவன்: சரி.. பார்ப்போம்.. மணிமாறனுமா டி.சி. கேட்கறான்.. (மணிமாறன் அமைதியாக இருக்கிறான்)
மகேஷ்: எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்ல அவனுக்குத் தயக்கமா இருக்கு.
.. நாங்கதான் வற்புறுத்தி விண்ணப்பம் கொடுக்கச் சொன்னோம்.
பழனி: மணிமாறனும் நாங்களும் பள்ளிக்கு... முன்னாடியே வந்து படிப்பிலே பின்தங்கி இருக்கற பிள்ளைங்களுக்குப் பாடம் சொல்லித் தர்றோம். திடல்ல.. மரத்தடியிலேதான் உட்கார.. வைக்கிறோம்.
 ..வேலப்பன் சில மாணவர்களோடு வர்றான். இது விளையாடற இடம்னு சொல்லி.. படிக்கிற பிள்ளைங்களை விரட்டறான்..
வளவன்: சரி... நான் அவங்க பெற்றோரைக் கூப்பிட்டு.. கண்டிக்கச் சொல்றேன்.
மணிமாறன்: வேண்டாம் சார்.. பிள்ளைங்களை நினைச்சு வருத்தப்படுவாங்க.. வீட்டிலேயும் அமைதி இருக்காது.
வளவன்: வேலப்பன் மாதிரி பிள்ளைங்களிடம் இந்த எண்ணம் கொஞ்சம் இருந்தாலும் உருப்படலாமே..
மகேஷ்: அவனுங்க உங்களுக்குப் பயப்படுவானுங்க.. நீங்க மாத்திடலாம்.
வளவன்: பயமுறுத்தறதோ... தண்டிக்கறதோ எத்தனை நாளைக்கு நிற்கும்...
.. அவங்க போற பாதை சரியானது இல்லேன்னு நயமா சொல்லி... புரிய வைக்கணும். முதல்ல.. ஆசிரியர்களிடம் இதைச் சொல்றேன்.
பழனி: அவங்களே இவங்க செயல்களைப் பார்த்து எரிச்சல்ல இருக்காங்க... எல்லாரோட நேரமும் வீணாகுதுன்னு சொல்றாங்க...
வளவன்: ...அதுக்கு நீங்க ஏன் டி.சி. கேட்கறீங்க?....
மகேஷ்: பள்ளியைத் தூய்மையா வைக்க முயற்சி எடுக்கறோம்...! மரக்கன்று வைக்கிறோம்...,படிப்பில் பின் தங்கியவங்களுக்குப் பாடம் சொல்லித் தருகிறோம்....இதிலே அவர்களும் பங்கெடுத்தா படிப்பும் வரும்.....நல்ல பழக்கமும் வளரும்....ஆனா?...அதுக்கு பதிலா இடைஞ்சல் செய்யறாங்க....எங்க புத்தகம்...நோட்டுகளை எடுக்கறாங்க....மிதி வண்டிகளை இடம் மாற்றி வைக்கிறாங்க....கண்ட இடத்திலே குப்பைகளைப் போடறாங்க....நாங்க வேறே பள்ளிக்குப் போனா நிம்மதியா படிக்கலாம்.....நினைச்ச நல்ல காரியங்களைச் செய்யலாம்....
வளவன்: மணிமாறன்....நீ என்ன சொல்றே?....
மணிமாறன்: என் நண்பர்களிடம் எவ்வளவோ சொன்னேன்.....அவங்க பிடிவாதமா இருக்காங்க.....அவங்க பக்கமும் நியாயம் இருக்கு......படிக்கிறதா....இந்தத் தொல்லைகளைச் சமாளிக்கிறதா?....
வளவன்: சரி...., ஒரு வாரம் பொறுமையா இருங்க.....

காட்சி-2
இடம்-பள்ளி
மாந்தர்-வளவன், பெற்றோர். 

(பள்ளி விதிகளுக்கு மாறாக....வீண் வேலைகளில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோர் வருகின்றனர். வளவனைச் சந்திக்கின்றனர்.) 
 
வேலப்பனின் தந்தை: ஐயா, வீட்டிலே வேலப்பனோட அடாவடி அதிகமா இருக்கு....அவனை இங்கே வைச்சு என்ன பாடு படறீங்களோ....அவனுக்குப் படிப்பே தேவையில்லை....
வளவன்: அப்படிச் சொல்லாதீங்க....கல்வி இருந்தாத்தான் நல்லது, கெட்டது ஒருத்தனுக்குத் தெரியும்...
வளவன்: என் பையன் வேலுவும் அப்படித்தான்....எது சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான்....வீட்டிலே மற்ற பிள்ளைங்களோடு சதா வம்பு....

(ஒவ்வொருவரும் புகார் கூறுகின்றனர்)

வேலப்பனின் தந்தை: என் பையனுக்கு டி.சி. கொடுங்க......அவன் தலையெழுத்து எப்படியோ அப்படியே ஆகட்டும்! அவன் இங்கே இருந்தா பள்ளியோட அமைதி போயிடும்...

(மற்றவர்களும் மாற்றுச் சான்றிதழ் கேட்கிறார்கள்)

வளவன்: கொஞ்சம் பொறுமையா இருங்க....அவசரப்பட்டா அவங்களோட எதிர்காலம் வீணாயிடும்....

(அவருடைய பெருந்தன்மையைக் கண்டு....,கையெடுத்துக் கும்பிடுகிறார்கள்)
 
காட்சி-3
இடம்- பள்ளி
மாந்தர்- வளவன், மணிமாறன், 
அவன் நண்பர்கள்

வளவன்: மணிமாறன்!....., உங்களுக்கு டி.சி. கொடுக்க எனக்கு அரை மணி நேரம் போதும்.....நீங்க படிப்பிலும் பண்பிலும் சிறந்த பிள்ளைங்க.....உங்களுக்கு எங்கேயும் இடம் கிடைக்கும்.....ஆனா...,இன்னொரு விஷயம்...உங்களைப்போல நல்ல மாணவர்களோட ஒத்துழைப்பு இருப்பதால.... நானும் இங்கே என் கடமையை நல்ல விதமா..., நிம்மதியா ஆர்வத்தோட செய்யறேன்.....நீங்க போன பின்னால எனக்கு வேற ஒரு பள்ளிக்கு இடமாற்றம் கேட்டுப் போயிடறேன்....

(அதைக் கேட்டதும் மணிமாறனும் மற்றவர்களும் திகைக்கிறார்கள்)

மகேஷ்: நீங்க இருந்தாத்தான் இந்தப் பள்ளி நல்லா இருக்கும்....உங்க அணுகுமுறையாலே....ஆசிரியர்களும் நல்லாப் பாடுபடறாங்க.... நீங்க இங்கேயே இருங்க....
வளவன்: அதையேதான் நானும் உங்களுக்குச் சொல்றேன்...... உங்களைப் போன்ற மாணவர்கள் இருந்தால்தான் நானும் ஆசிரியர்களும் நல்லா பணியாற்ற முடியும்.....எங்க முயற்சிகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும்....
மகேஷ்: அந்த வேலப்பன்....அவன் நண்பர்கள்.....
வளவன்: அவங்களுக்கு டி.சி. கொடுக்கலாம்..... ஆனா அவங்க வேற பள்ளியிலே அவ்வளவு சுலபமா சேர முடியாது.....அப்படியே கிடைச்சாலும் அவங்க நடத்தையாலே.... அங்கே நீடிக்க முடியாது. 
பழனி: அதுக்கு நாம என்ன செய்யறது? 
வளவன்: அவங்களை இங்கேயே வெச்சுக்குவோம்.... மணிமாறன் மேல...., உங்க மேல, எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கு.... அவங்க குணத்தை மாற்றி.....,நல்லாப் படிக்கிற பிள்ளைங்களாகவும் அவங்களை மாற்றிடுவீங்க....அவங்க எதிர்காலமும் நல்லவிதமா அமைஞ்சிடும்....
மகேஷ்: மணிமாறனோட விருப்பமும் அதுதான்....நாங்கதான் விரும்பலே....இனி...உங்க சொல்படி நடப்போம்...
மணிமாறன்: நீங்க காட்டற அன்பும்....,கொடுக்கிற ஊக்கமும் எங்களை நல்ல நிலைக்குக் கொண்டு போகும்..., அதே நேரத்தில்....,வேலப்பனையும், அவன் நண்பர்களையும் புறக்கணிக்க மாட்டோம்!.... அவர்கள் மாறினா.... பள்ளியிலே இன்னும் பத்து மரக்கன்றுகள் துளிர் விட்ட மாதிரி...! இங்கேயும் அவங்க வீட்டிலேயும் நிம்மதிங்கற நிழல் கிடைக்கும். 

(வளவன்....அன்போடு அவர்களின் முதுகில் தட்டிக் கொடுக்கிறார்)

திரை
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.