

தாய்லாந்து நாட்டுக் குறுமலையில்
தாழ்வாய் ஒரு குகை உள்ளதாம்! - அதன்
வாய் முதல் ஐந்து கிலோ மீட்டர்
வழியோ குறுகிய பாதையுடன்...
கால்பந்து ஆடும் சிறுவர் குழு
கனிவாய்ப் பயிற்சி யாளருடன்
பால்மனம் மாறா இளஞ்சிறுவர்
பன்னிரெண்டு பேர்கள் ஒரு குழுவாய்
குகையைப் பார்த்து வர எண்ணி
குறுகிய வழியே உட்சென்றார்!
வகையாய் பெருமழை பெய்ததுவாம்
வர இயலா வெள்ளம் உள்ளிருந்தார்
உணவு உடை இன்றி குகையினிலே
உயரப் பாறையில் தங்கினராம்....
தினமும் பயிற்சி யாளரங்கே
தியானம், நம்பிக்கை பயிற்சி தந்தார்.
உயர்நெறி உலக நாடெல்லாம்
ஒன்றாய் உதவிகள் செய்ததுவாம்!
தயவாய் இந்தியா நம் நாடும்
தண்ணீரை வெளியேற்றியதாம்!
விரைந்த மீட்பு குழுதனிலே
வீரன் "சமன் குனான்' என்ற
கப்பற் படையைச் சேர்ந்தவர்- தன்
உயிரை அங்கே விட்டுவிட்டார்!
பல நாடுகளின் மீட்புக்குழு
பலவாய் முயற்சி செய்தார்கள்!
பதினேழு நாட்கள் கழிந்தனவே!
பாலர் அனைவரும் மீண்டனரே!
மீட்டிய குழுவைப் பாராட்டி
மேதினி யெல்லாம் புகழ்ந்ததுவே!
மீட்கப்பட்ட சிறுவர்களும்
அஞ்சலி செலுத்தினர் மறைந்தவர்க்கு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தென்காசியில் குரூப் 2, 2ஏ தோ்வு
மகளிா் ஆதரவு இருக்கும் வரை, திமுக அரசை எவராலும் வீழ்த்த முடியாது: முதல்வர் ஸ்டாலின்!

ஆலங்குளம் பேருந்து நிலைய இடம் மாற்றம்: போதிய ஏற்பாடுகள் இல்லாததால் பயணிகள் அவதி
இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக், கைப்பேசி பறிப்பு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

