விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாற்றம் நிகழ்ந்தது!

னம் இன்றைய செய்திக்கு உரியவர் யார் என்ற எதிர்பார்ப்புடன் வந்தது.சொல்லுக்கு மரியாதை தராமல் ரகுமானை வருத்தத்திற்கு உள்ளாக்கிய ஜப்பாரைப் பற்றிப் பேச்சு வந்தது! 

News image
Updated On :24 நவம்பர் 2018, 5:13 am

பூதலூர் முத்து

ஞானக்கிளி 27
னம் இன்றைய செய்திக்கு உரியவர் யார் என்ற எதிர்பார்ப்புடன் வந்தது.
சொல்லுக்கு மரியாதை தராமல் ரகுமானை வருத்தத்திற்கு உள்ளாக்கிய ஜப்பாரைப் பற்றிப் பேச்சு வந்தது! 
பீட்டர் ஒரு செய்தியுடன் இருந்தான். 
"அக்கா!.....ஜப்பார் இனிமே அந்த மாதிரி நடக்க மாட்டான்...''
"ஏன் என்ன நடந்தது?...''
"மூணு நாளுக்கு முன் ஜப்பார் வீட்டிலே நூறு ரூபாய் கொடுத்திருக்காங்க..... அதை அவன் விளையாட்டுத் திடலில் தொலைச்சிட்டான்!....வீட்டுக்கு வரும்போது துவரம்பருப்பு வாங்கி வரக் கொடுத்த பணம்!....குமரகுரு என்ற பையனிடம் பணம் கேட்டான். இங்கேயே இரு....கைப்பந்து விளையாட்டு முடிஞ்சதும் தர்றேன்....நாளைக்கு மறக்காம திருப்பித் தரணும்...''என்றான்.
குமரகுரு போனதும் ஜப்பாருக்குத் தெரிந்த அப்துல்காதர் அந்த வழியாக வந்தான். 
"ஜப்பார்!....ஏன் இங்கே உட்கார்ந்திருக்கே? என்ன விஷயம்?...''
ஜப்பார் நடந்ததைச் சொன்னான்.
"இது ஒரு விஷயமா?...எனக்குத் தெரிந்த சாகுல் ஹமீது பள்ளிக்கு வெளியே மளிகைக்கடை வெச்சிருக்கார்.....உனக்குத் துவரம்பருப்பே வாங்கிக் கொடுக்கிறேன்....நீ இங்கேயே இரு....அஞ்சு நிமிஷத்தலே வர்றேன்...'' என்று வேகமாகச் சென்றான். 
"துவரம் பருப்பு வந்துவிட்டால் குமரகுருவிடம் பணம் வாங்கத் தேவையில்லை...'' என்று ஜப்பார் முடிவு செய்தான்.
காத்திருந்ததுதான் மிச்சம்.... இருவருமே வரவில்லை.... அலுத்துப் போய்விட்டது.
குமரகுருவை மறுநாள்தான் பார்க்க முடிந்தது. 
"ஜப்பார்,.... வருத்தப்படாதே..... நான் மறந்துவிட்டு பின்பக்க வழியாகப் போய்விட்டேன்..... பணம் கேட்டாயே.... தரட்டுமா?'' என்று அமைதியாகக் கேட்டான். அது ஜப்பாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. 
அப்துல் காதர் அவன் தந்தையோடு வெளியூர் போனதாகத் தகவல் வந்தது. வெளியூர் புறப்பட நேரம் இருந்த அவனுக்குத் துவரம் பருப்புடன் வரப் பத்து நிமிடம் கிடைக்கவில்லை....
நிதானமாகச் சிந்தித்தான்.
மற்றவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்திவிட்டு அதைச் செய்யாமல் விட்டால் அவர்கள் எவ்வளவு துன்பம் அடைவார்கள் என்பது புரிந்தது. 
இனிமேல் விளையாட்டு...ஞாபக மறதி என்றெல்லாம் பெயர் சூட்டி இந்த வீணான வேலையைச் செய்ய மாட்டேன்.... சொன்ன சொல்லுக்கு மரியாதை தருவேன்....என் தவறுக்கு ரகுமானிடம் மன்னிப்புக் கேட்பேன்...''
ஜப்பார் தன்னிடம் சொன்னதைப் பீட்டர் சொன்னான்.
ஞானம் மகிழ்ந்தது. "நீங்களே நம்பத் தகுந்த பிள்ளைகள் என்பது உங்கள் அன்றாட செயல்கள் மூலமாகத்தானே வெளிப்பட வேண்டும்?...மனமாற்றம் அடைந்த ஜப்பாருக்கு நம் வாழ்த்து!''
ரகுமானுக்கும் பிள்ளைகளுக்கும் நிம்மதியாக இருந்தது. 
...கிளி வரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.