விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாராட்டுப் பாமாலை!: 64 - உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது

தெலங்கானா நிஜாமாபாத் மாவட்டத்தில்ஒரு குழந்தைத் தொழிலாளி "மல்லேஸ்வர் ராவ்!' சிறு வயதில் கடும் உழைப்பு வறுமையினால்!

News image
Updated On :28 டிசம்பர் 2019, 3:58 pm

சுமன்

தெலங்கானா நிஜாமாபாத் மாவட்டத்தில்
ஒரு குழந்தைத் தொழிலாளி "மல்லேஸ்வர் ராவ்!' 
சிறு வயதில் கடும் உழைப்பு வறுமையினால்!
ஒரு வேளை குடும்பம் உண்ணப் பெரும்பாடு!

ஒரு நாளில் மிகச் சோர்வாய்த் தெருவோரம் 
பசியாலே மிக வாடிப் படுத்திருந்தான்! - அதைப் 
பார்த்திட்ட அன்புள்ள ஒரு மனிதர் - சிறுவனின்
பசியாற்றிப் பரிவுடனே உதவி செய்தார்!

"ஹேமலதா லாவனம்' தான் அவர் பெயராம்! - சிறுவன்
மல்லேஸ்வர் ராவ் மீது அன்புகொண்டார்! 
உணவோடு, உறைவிடமும் அவர் தந்தார்! தன்
பள்ளியிலும் சேர்த்திட்டுக் கல்வி தந்தார்!

எளியோர்க்கு நாம் இனி உதவ வேண்டும் - என்று 
மல்லேஸ்வர் ராவ் மனதில் உறுதி கொண்டான்!
ஒரு சமையல் நிறுவனத்தில் வேலை பெற்றான்! - அங்கு
வீணாகும் உணவுகளால் மனம் நொந்தான்!

"டோண்ட்வேஸ்ட் ஃபுட்' என்று ஓர் அமைப்பினையே
ஏற்படுத்தி ஏழைகளுக்குணவளித்தான்!
திருமணங்கள், மற்றும் பல நிகழ்ச்சிகளில் 
வீணாகும் உணவுகளைச் சேகரித்து

வீதியிலே பசித்தோர்க்கு உணவளித்தான்!
பற்பலரும் உதவி செய்ய இப்போது
ஹைதராபாத், தில்லி, ரோத்தக் டேராடூன் - என 
நாடெங்கும் சேவைகள் தொடர்கிறது!

"இண்டியன் யூத் ஐகான்' எனும் விருது
"ராஷ்டிரிய கவுரவ் அவார்டு' பட்டம்!
என்றெல்லாம் கவுரவித்துச் சிறப்பித்து
மல்லேஸ்வர் ராவுக்குப் பாராட்டு!

""வீதியிலே உணவின்றி மிக வாடும்
ஏழைகளின் பசியாறி மலரும் முகம் 
பார்ப்பதுதான் நான் விரும்பும் "நிஜ விருது'...'' 
எனக் கூறும்  மல்லேஸ்வர் ராவ்! வாழ்க!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.