விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நினைவுச் சுடர்!: வாய்மை!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் ஆறு வயது சிறுவனாக இருந்தபோது அவருக்கு ஒரு சின்ன கோடாலி கிடைத்தது. அவர் அந்தக் கோடாரியால் தோட்டத்திலுள்ள செடிகளையும், மரங்களையும் வெட்டி

News image
Updated On :7 ஜனவரி 2019, 10:47 am

நெ. இராமன்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் ஆறு வயது சிறுவனாக இருந்தபோது அவருக்கு ஒரு சின்ன கோடாலி கிடைத்தது. அவர் அந்தக் கோடாரியால் தோட்டத்திலுள்ள செடிகளையும், மரங்களையும் வெட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அந்தத் தோட்டத்தில் அபூர்வமான செர்ரி மரம் இருந்தது. அந்த மரம் அவரது அப்பாவுக்கு மிகவும் பிடித்தமான மரம். வாஷிங்டன் விளையாட்டு சுபாவத்தில் தன் கோடரியால் அந்த மரத்தின் அடிப்பாகத்தில் வெட்டினார்.  மரம் வாடிவிட்டது!

வாஷிங்டனின் தந்தை தனது பிரியமான மரத்திற்கு ஏற்பட்ட கதியை கண்டு வருந்தினார். வாஷிங்டனிடம், ""ஜார்ஜ்!.... எனது செர்ரி மரத்தை வெட்டியது யார் என்று உனக்குத் தெரியுமா?...'' என்று கேட்டார்.

ஜார்ஜ் வாஷிங்டன் திகைப்புற்று நின்றார். "தெரியாது' என்று சொல்லலாமா என்றும் நினைத்தார். மறு நிமிடமே, ""அப்பா!.... நான் பொய் சொல்ல மாட்டேன்!... ''என்று கத்திவிட்டு, ""நான்தான் உங்கள் பிரியமான மரத்தை வெட்டியவன்.... மன்னியுங்கள்!....'' என்றார். 

ஜார்ஜின் தந்தைக்குக் கோபம் தணிந்தது! மகனை அன்போடு அணைத்தார். ""என் அருமை மகனே!.... இப்படித்தான் நீ அஞ்சாமல் உண்மையைச் சொல்ல வேண்டும்!.... நீ உண்மையைப் பேசியதால் உன் தவற்றை மன்னிக்க எனக்கு மனம் வருகிறது! எப்போதும் உண்மை பேசுவதே உயர்வானது!....இனி மரங்களை வெட்டாதே!....'' என்றார்.

பயம் தெளிந்த ஜார்ஜ் ""சரி அப்பா!'' என்றான் தந்தையைக் கட்டிக்கொண்டு! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.