/

குண்டுப் புறா!

குட்டி மூக்குக் குண்டுப் புறாவின் கூட்டம் பாருங்க! - அது தத்தித் தத்தித் தரையில் இரையைக் 

News image
Updated On :26 டிசம்பர் 2020, 4:40 pm

எஸ். ஆர். ஜி. சுந்தரம்

குட்டி மூக்குக் குண்டுப் புறாவின் 
கூட்டம் பாருங்க! - அது 
தத்தித் தத்தித் தரையில் இரையைக் 
கொத்துது பாருங்க!

சாம்பல் நிறத்துக் கழுத்தை அசைத்து
சுழன்று பார்க்குது! - அது 
ஆம்பல் விரலின் அழகுக் காலால் 
அசைந்து நடக்குது!

கடுகு போன்ற கண்ணைச் சுழற்றிப் 
பக்கம் பார்க்குது! - அது 
படபட வென்று பட்டுச் சிறகால் 
பறந்து போகுது!

அந்தக் கால அரசருக்காக 
இந்தப் புறாதான் - தினம் 
பாய்ந்து வானில்  செய்தி சேர்க்கப் 
பறந்து சென்றதே! 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.