விடுகதைகள்


1. போடாத சட்டையை கழற்றிப் போடுவான்,
மந்திரவாதி அல்ல....
2. அடித்தால் அழுது ஆனந்தம் தருவான்...
3. வேரில்லை முளைத்திருக்கு... இலையில்லை
கிளையிருக்கு...
4. கரும் வயலில் யானைகள் மேய்ச்சல்... இது என்ன?
5. ஒரு நெல் குத்தினால் வீடெல்லாம் உமி...
6. கண்டு பூ பூக்கும், காணாமல் காய் காய்க்கும்...
7. உயர்ந்த வீட்டில் இருக்கும் ஊரார் தாகம் தீர்க்கும்...
8. காட்டிற்குச் சென்றால் கலகலப்பாய் உழைப்பான்... வீட்டுக்கு வந்தால் படுத்து உறங்குவான்...
9. வரிக்குதிரை ஓடியது... வாய்ப்பாட்டு பாடியது...
விடைகள்
1. பாம்பு
2. மத்தளம்
3. மான்கொம்பு
4. தலையில் பேன்கள்
5. விளக்கு
6. வேர்க்கடலை
7. மழை நீர்
8. கோடரி
9. இசைத்தட்டு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...