விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாடங்கள் போதிக்கும் வள்ளியப்"பா'!

குழந்தைகள் விரும்புது பாட்டப்பா -அதைக்    கேட்டு குதிக்குது பாரப்பா!அழகிய கவிதைக்கு வள்ளியப்பா! -அவர்     ஆனந்தம் தகுகின்ற இல்லமப்பா!

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 3:45 pm

ரமண ராஜசேகர்

குழந்தைகள் விரும்புது பாட்டப்பா -அதைக்
    கேட்டு குதிக்குது பாரப்பா!
அழகிய கவிதைக்கு வள்ளியப்பா! -அவர் 
    ஆனந்தம் தகுகின்ற இல்லமப்பா!

குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா! தினம்     
    கொடுத்தார் கவிதையை அள்ளியப்பா! 
அழகு அழகு கவிதையப்பா- அது
    அரும்புகள் நெஞ்சைக் கவருமப்பா!

குழந்தையை நேசித்த உள்ளமப்பா -அவர் 
    கொடுத்த கவிதைகள் வெல்லமப்பா! 
மழைபோல் குளுமை தருமப்பா! -அவர் 
    மாணவர் நேசிக்கும் குருவப்பா!

பிள்ளைகள் பாடுது ராகமப்பா -அவர் 
    பாட்டுக்கள் பள்ளியில் பாடமப்பா! 
நல்லதைக் கூறிடும் பாடலப்பா! -இதை 
    நாளும் கற்றிட வேணுமப்பா!

பாடங்கள் போதிக்கும் கவிதையப்பா - அவர் 
    பாடல்கள் அறிவுரை கூறுமப்பா! 
நாடே போற்றும் கவிஞரப்பா! - தமிழ் 
    நாட்டுக்குப் பெருமை அழ.வள்ளியப்பா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.