

பச்சை வண்ணக் கிளியக்கா
பேசக் கற்ற கிளியக்கா
இச்சை உனக்குக் கனியக்கா
என்னை மயக்கும் கிளியக்கா
எட்டு அடுக்குச் சிறகக்கா
எட்டுத் திக்கும் உறவக்கா
கட்டுக் காவல் இலாமலே
காற்றில் பறக்கும் அழகக்கா
வளைந்த மூக்கும் உனக்குண்டு
வளையம் கழுத்தில் அணிந்திருப்பாய்
விளைந்த செந்நெல் கொய்திடுவாய்
வண்ணம் ஏழும் பெற்றிருப்பாய்
கிழித்துப் பழத்தை உண்பதனால்
கிளியென் றுன்னை அழைப்பார்கள்
அழியும் நிலையில் உன்னினமே;
அறிந்து நொந்தது என் மனமே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.