பரமக்குடி சீனிவாசன் சிறந்த தேசப் பக்தர். ஒருநாள் அவர் தனது நண்பரும், முதல்வராகவும் இருந்த பெருந்தலைவர் காமராஜரை சந்தித்து, 'என் மகனுக்கு பிரசிடென்சி கல்லூரியில் பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி பிரிவில் இடம் இல்லை என்கிறார்கள். நீங்கள் சொன்னால் சீட் கிடைக்கும்' என்றார்.
உடனே காமராஜர் கல்லூரிக்கு போன் செய்து கேட்டபோது, 'அந்தப் பிரிவுக்கு 12 இடங்கள் அரசு அனுமதித்துள்ளது. ஏற்கெனவே 12 பேர் தகுதியின் அடிப்படையில் சேர்ந்துவிட்டனர். மேற்கொண்டு சேர்க்க வழியில்லை' என்றார் கல்லூரி முதல்வர்.
பின்னர் காமராஜர் சென்னை பல்கலை. துணை வேந்தர் ஏ.லட்சுமணசுவாமி முதலியாரிடம் கேட்டபோது அவர், 'பிரசிடென்ஸி கல்லூரியில் 12 மாணவர்களுக்குதான் இடம். மேற்கொண்டு சேர்க்க ஆய்வக வசதி இல்லை' என்றுகூறிவிட்டார்.
பின்னர் காமராஜர் கல்வி அமைச்சரிடம் கேட்டபோது அவரும் அதையே கூறினார். உடனே காமராஜர், 'ஏன்யா.. உங்க வீட்டுக்கு 12 விருந்தாளிகள் வருவதாகக் கூறிவிட்டு, மேற்கொண்டு அதிக விருந்தாளிகள் வந்தால் 12 பேருக்குதான் சாப்பாடு இருக்கிறது என்று கூறி, மற்றவர்களைத் திருப்பி அனுப்பிவிடுவீர்களா?
மறுபடியும் சமைத்து விருந்து கொடுப்பீர்கள் அல்லவா? அதுபோல் அந்தக் கல்லூரியில் அதிக மாணவர்கள் சேரவிருப்பதால், இரண்டு ஷிப்ட்டாக நடத்தலாமே? காலையில் 12 பேர், மாலையில் 12 பேர் என்று' என்றார்.
இதற்கு கல்வி அமைச்சர், 'சரி ஐயா.. அப்படியே உத்தரவு போட்டு விடுகிறேன்' என்றார்.
பின்னர் அருகில் இருந்த சீனிவாசனை பார்த்து காமராஜர், 'அந்தக் கல்லூரியில் 12 இடம் அதிகமாகிவிட்டது. உன் மகனுக்கு எப்படியும் இடம் கிடைத்துவிடும் என்று நினைத்துகொண்டிருக்காதே. உன் மகனுக்குத் தகுதி இருந்தால் இடம் கிடைக்கும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தெரிஞ்சுக்கோங்கோ...

கேட்ட காமராஜர்! மறுத்த தீர்த்தகிரியார்!

தேர்தல் 1962! கடைசியாக காங்கிரஸ் பெற்ற வெற்றி!
தேர்தல் 1957: சட்டப்பேரவைக்குள் முதன்முதலாக நுழைந்த திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

