புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அசத்தும் சாதனை

தென்கொரியாவில் அறிவியல், ஆராய்ச்சித் துறைகளில் பணியாற்றி வரும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் முனைவர் பாலமுரளிகிருஷ்ணனின் அறிவியல் சாதனையை ஊக்குவிக்கும் வகையில், சேஜோங் பல்கலைக்கழகம் சார்பில் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

Published On :

தென்கொரியாவில் அறிவியல், ஆராய்ச்சித் துறைகளில் பணியாற்றி வரும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் முனைவர் பாலமுரளிகிருஷ்ணனின் அறிவியல் சாதனையை ஊக்குவிக்கும் வகையில், சேஜோங் பல்கலைக்கழகம் சார்பில் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இதுகுறித்து அவர் கூறியது:

'தென்கொரியாவில் கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், மென்பொருள், இயந்திரவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்.

நான் சேஜோங் பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பம், உணவு அறிவியல் தொடர்புடைய ஆராய்ச்சித் துறைகளில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.

நுண்ணுயிரியல், விலங்குத் தீவன அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு சர்வதேச அறிவியல் இதழ்களில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன்.

மேலும், ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம்- எல்ஸ்வர் வெளியிடும் உலகின் முன்னணி 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில், 2022-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 4ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறேன். இது எனது சர்வதேச அளவிலான அறிவியல் ஆராய்ச்சிப் பங்களிப்புக்குக் கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாகும். இதற்காக சேஜோங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், நான் பாராட்டப்பட்டேன்.

இந்த அங்கீகாரம் தென்கொரியாவில் வாழும் தமிழர்களிடையே மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் தமிழர்கள் கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பத் துறைகளில் சாதித்து வருவது, தமிழர்களின் அறிவியல் திறமை, கல்வி ஆர்வம், கடின உழைப்பை உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது' என்கிறார் பாலமுரளிகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.