அந்த இருபது விநாடிகள்!
திருச்சி நகரிலுள்ள ஒரு கல்லூரியில் ஒரு சமயம் கி.ஆ.பெ. விசுவநாதம் நிகழ்த்திய சிறப்புரையின் இடையே கூறியது இது:


திருச்சி நகரிலுள்ள ஒரு கல்லூரியில் ஒரு சமயம் கி.ஆ.பெ. விசுவநாதம் நிகழ்த்திய சிறப்புரையின் இடையே கூறியது இது:
நாம் பயன்படுத்தும் கடிகாரத்தில் மூன்று முட்கள் உள்ளன. இதில் ஒரு முள் மணியைக் காட்டுகிறது. இரண்டாவது முள் நிமிடத்தைக் காட்டுகிறது. மூன்றாவது முள் விநாடியைக் காட்டுகிறது.
இவற்றுள் மணியைக் காட்டும் முள் இந்தியர்களுக்காக ஓடுகிறது. நிமிடத்தைக் காட்டும் முள் ஆங்கிலேயர்களுக்காக ஓடுகிறது. விநாடியைக் காட்டும் முள் யாருக்காக ஓடுகிறது என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக இருந்தது. இது பற்றிய சிந்தனை அவ்வப்பொழுது வரும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் நாட்டு கப்பல் ஒன்று சென்னை துறை
முகத்திற்கு வந்தது. அந்தக் கப்பலின் கேப்டனை சந்திக்க விரும்பி அவரிடம் அனுமதி கேட்டிருந்தேன். கிடைத்தது. நான் அவரைச் சந்தித்து கை குலுக்கி ஊர், பெயர் விவரம் சொல்லி முடிப்பதற்குள் அவர் எனக்குக் கொடுத்த நேரம் முடிந்துவிட்டது. நான் அவசர அவசரமாக அந்த அறையிலிருந்து வெளியேறிவிட்டேன்.
அவர் எனக்குக் கொடுத்த நேரம் எவ்வளவு தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள். இருபது விநாடிகள் தான். அப்பொழுதுதான் எனது நெடு நாளைய சிந்தனைக்கு விடை கிடைத்தது. கடிகாரத்தில் மூன்றாவது முள் ஜப்பானியர்களுக்காக ஓடுகிறது. ஜப்பானியர்கள் நேரத்தைப் போற்றிப் பயன்படுத்துபவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...