மிதக்கும் நகரம்
இத்தாலியில் உள்ள வெனிஸ் நகர தெருக்களில் கார் ஓட முடியாது. படகு தான் மிதந்து செல்லும்.


இத்தாலியில் உள்ள வெனிஸ் நகர தெருக்களில் கார் ஓட முடியாது. படகு தான் மிதந்து செல்லும்.
அமைதியான கடல் இருக்க இருபுறமும் அழகிய கட்டங்களை கொண்ட இந்த மிதக்கும் நகரினை பல திரைப்படங்கள் மூலமாக நாம் பார்த்திருப்போம். இப்படிப்பட்ட இந்த அழகிய நகரினை நீரில் மிதக்கும்படி எப்படி உருவாக்கினார்கள் என்று தெரியுமா?
வெனிஸ் நகர வரலாறு கி.பி.5 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. இத்தாலியின் தெற்கு ரோமானிய பேரரசு வீழ்ச்சிக்குப் பின்னர் ஏராளமான படையெடுப்புகள் நிகழ்ந்ததால் உயிருக்கு பயந்த மக்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
அவர்கள் அருகிலிருந்த டார்சிலோ, லெஸிலோ போன்ற தீவுகளில் தஞ்சம் புகுந்து அங்கேயே வாழப் பழகிக்கொண்டனர். ஆனால் சில ஆண்டுகளிலேயே கடல் நீர் மட்டம் உயர ஆரம்பித்ததால் அந்தத் தீவுகள் நூறுக்கும் மேற்பட்டவைகளாக பிரிய ஆரம்பித்தன.
எனவே நிலத்தை விரிவுபடுத்தி வாழ்வதற்கு தகுந்த இடமாக மாற்றும் முயற்சியில் களம் இறங்கினர். இதற்காக அருகிலிருந்த மரங்களை வெட்டி, இடைவெளியில்லாமல் கடலில் புதைத்து, மரத்தினாலான அஸ்திவாரத்தை அமைத்தனர்.
இதனால் தீவுகளுக்கு இடைப்பட்ட நீர்ப்பரப்பு உறுதியான மரத்தறியாக மாறியது. மேலும் மணல் பரப்பின் மீது மரக்கட்டைகளை அடுக்கி தனித்தனியே பிரிந்த தீவுகளை ஒன்றிணைத்து, ஒரே பகுதியாக மாற்றினார்.
இதுவே வெனிஸ் நகரின் அஸ்திவாரமாக மாறியது. அதன் மீது மீண்டும் மரங்களை அடுக்கி அவரவர் தேவைக்கேற்ப கடலுக்குள்ளேயே வீடுகளை கட்டமைத்துக் கொண்டனர். தீவுகளின் நிலப்பரப்பும் சுருங்க தொடங்கியது.
குறுகிய காலத்திற்குள்ளாகவே பல விதமான வீடுகள் கட்டப்பட்டன. வீடுகள் கட்ட கட்டுமானப் பொருட்கள் அருகில் இருந்த நகரங்களில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்டது. இப்படித்தான் வெனிஸ் நகரம் "மிதக்கும் நகரமாக' உருமாறியது.
இப்படி கடலுக்குள் ஆச்சரியப்பட வைக்கும் வண்ணம் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ள வெனிஸ் நகரையும் அக்குவா, அல்ட்டா எனப்படும் இயற்கை சீற்றம் அடிக்கடி அச்சுறுத்தி வருகிறது. அக்குவா, அல்ட்டா என்பது கடல் நீர் மட்ட உயர்வைக் குறிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...