டிஸ்கவரி சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'வடக்கன்'. குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா, ரமேஷ் வைத்தியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை எழுதி இயக்குகிறார் பாஸ்கர் சக்தி. படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... '' இடப்பெயர்வு என்பது மனித வரலாற்றில் முதன்மையானது. ஆதிகாலம் முதல் இடப்பெயர்வு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. வாழ்க்கை தேவைகள் இருக்கும் வரை இது தவிர்க்க இயலாது. வேலை கொடுப்பவர்கள் இருக்கும் வரை இடப்பெயர்வு இன்னும் கால, காலத்துக்கு நடந்து கொண்டே இருக்கும். தமிழர்கள் உலகில் 37 நாடுகளில் நல்ல பணிகளில் உயர் வாழ்கைத்தரத்துடன் இருப்பதற்கு இடப்பெயர்வு தானே காரணம்.
வட இந்திய தொழிலாளர்கள், தமிழ்நாட்டு தொழில் முனைவோரால் பணி அமர்த்தப்படுவதற்கு குறைந்த ஊதியத்துக்கு அவர்கள் வேலை செய்ய கிடைக்கிறார்கள் என்பது மட்டும் அல்ல இங்கு ஆள் பற்றாக்குறையும் காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பே மும்பை போன்ற வட இந்திய நகரங்களுக்கும் மற்ற வட இந்திய மாநிலங்களில் கூலி வேலைக்கும், மளிகைக்கடை போன்ற சிறு கடைகள் வைத்து பிழைத்துக்கொள்ளவும் போகவில்லையா? இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா, செஷல்ஸ் தீவுகள், மொரிஷியஸ் முதலிய நாடுகளுக்கு ஒப்பந்த கூலிகளாகவும் தமிழர்கள் சென்று பல தலைமுறை
களாக வசித்து வருகிறார்கள். அவர்களின் சந்ததிகளின் பலர் இப்போது அந்த நாடுகளின் ஆட்சியிலும் பல உயர் பதவிகளில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இப்போது வட இந்தியர்கள் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடியேறி விட்டார்கள் என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. அப்படி ஒரு விவாதம்தான் இந்தப் படம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.