புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மலரே... குறிஞ்சி மலரே...

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் நீல நிறக் குறிஞ்சி மலர்கள், எதிர்பாராதவிதமாக 2030-ஆம் ஆண்டுக்குப் பதிலாக 2026-ஆம் ஆண்டு ஜூலையில், கேரளாவில் மூணாறுக்கு அருகிலுள்ள 'சொக்ரமுடி' மலைப்பகுதிகளில் பூக்கத் தொடங்கியுள்ளன.

Published On :

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் நீல நிறக் குறிஞ்சி மலர்கள், எதிர்பாராதவிதமாக 2030-ஆம் ஆண்டுக்குப் பதிலாக 2026-ஆம் ஆண்டு ஜூலையில், கேரளாவில் மூணாறுக்கு அருகிலுள்ள 'சொக்ரமுடி' மலைப்பகுதிகளில் பூக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு முன் 2018-ஆம் ஆண்டில் குறிஞ்சி மலர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் பூத்த நிலையில், அது பேசுபொருள் ஆகியிருந்தது.

2026-ஆம் ஆண்டு செப்டம்பரில் குறிஞ்சி மலர்கள் இன்னும் அதிக அளவில் பூத்துக் குலுங்கி, அந்த நிலப்பரப்பை நீலநிறக் கம்பளம் போர்த்தியது போல மாற்றி, இயற்கை ஆர்வலர்களுக்குக் கண்கொள்ளாக்காட்சியாக அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை 'மலர் ராணியாக்கும்' இந்த இயற்கை ரங்கோலியைப் பிரபலப்படுத்த கேரளத்தின் இடுக்கி மாவட்ட வனத்துறையும் சுற்றுலாத் துறையும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தமிழ்நாட்டின் கொடைக்கானல், நீலகிரி, கேரளத்தின் மூணாறு மலைப்பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் வளர்கின்றன. சங்க காலத்தில் நிலத்தை ஐந்தாகப் பிரித்ததில், மலைகளும் மலை சார்ந்த இடங்களும் 'குறிஞ்சி' என அழைக்கப்பட்டன. அந்த நிலத்துக்குரிய முதன்மையான மலராகவும், தமிழ்க் கடவுளான முருகனின் அடையாள மலராகவும் இது கருதப்படுகிறது. நீலம், கருநீலக் குறிஞ்சி மட்டும்தான் இப்போது நீலகிரியில் காணப்படுகிறது.

குறிஞ்சி மலரின் நீல நிறம்தான் 'நீலமலை' அல்லது 'நீலகிரி' என அமைந்தது. கோத்தகிரி, கொடநாடு, தொட்டபெட்டா, மேல்பவானி, குந்தா ஆகிய இடங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மலைகள் முழுவதும் குறிஞ்சி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்து நிற்கும் காட்சியைப் பார்க்க முடியும்.

'நீலக் குறிஞ்சி' தனக்கே உரிய 'ஒருமுறை பூத்து அடுத்த 12-ஆவது ஆண்டில் பூக்கள் சுழற்சியை' இதுவரை கறாராகப் பின்பற்றி வந்திருக்கிறது. காலநிலை மாற்றம் குறிஞ்சி பூப்பதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது 2026-ஆம் ஆண்டில் உண்மையாகியிருக்கிறது.

முன்கூட்டியே பூப்பது ஏன்?

'நீலக் குறிஞ்சி' 12-ஆவது ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே பூத்து, பின்னர் அழிந்துவிடுகிறது. அதன் விதைகள் மண்ணில் தங்கி, அடுத்த தலைமுறைத் தாவரங்களாக வளர்கின்றன; அவை சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைப் புல்வெளிகளில் நீலக்

குறிஞ்சியின் வெவ்வேறு தாவரக் கூட்டங்கள் வளர்வதே இந்தக் குழப்பத்துக்குக் காரணமாக அமைகிறது. அவை அனைத்தும் ஒரே ஆண்டில் பூப்பதில்லை.

மட்டப்பெட்டி-கன்னிமலைப் பகுதியில் உள்ள தாவரக் கூட்டம் 1990, 2002, 2014 ஆகிய ஆண்டுகளில் பூத்தது; அதன்படி இது 2026-ஆம் ஆண்டு சுழற்சியில் வருகிறது.

சொக்ரமுடி-கொடைக்கானல்-பூண்டி பகுதியில் உள்ள தாவரக் கூட்டமும் 2014-இல் பூத்தது, தற்போது மீண்டும் பூக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில், 2018-இல் கண்கவர் விதமாகப் பூத்த இரவிகுளம் தேசியப்பூங்காவில் உள்ள நீலக்குறிஞ்சித் தாவரங்கள் ஒரு மாறுபட்ட சுழற்சியைக் கொண்டுள்ளன; அவை 2030-இல் மீண்டும் பூக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், சில குறிஞ்சிச் செடிகளுக்கு 2026-ஆம் ஆண்டும், வேறு சில குறிஞ்சிச் செடிகளுக்கு 2030-ஆம் ஆண்டும் 'பூக்கும் ஆண்டாக' அமைகிறது.

'அகாந்தேசி' குடும்பத்தைச் சேர்ந்த நீலக்குறிஞ்சியானது, மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான புல்வெளிகளில், கடல் மட்டத்திலிருந்து 1,500 முதல் 2,500 மீட்டர் வரையிலான உயரத்தில் வளர்கிறது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 146 'ஸ்ட்ரோபிலாந்தஸ்' வகைகளில், சுமார் 43 வகைகள் கேரள மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. மிகப் பெரிய நீலக்குறிஞ்சித் தொகுப்புகளில் ஒன்று மூணாறில் உள்ளது.

இந்தப் பூக்கள் சுமார் 3,000 ஹெக்டேர் பரப்பளவிலான மலைச்சரிவுகளில் பரவியுள்ளன. இப்படிப் பரவலாகவும் அதே சமயம் பல இடங்களில் வளர்வதும், வெவ்வேறு பகுதிகளில் உள்ள குறிஞ்சிச் செடிகள் வெவ்வேறு கால அட்டவணையில் பூப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது.

பூத்துக் குலுங்கப் போகும் பூக்கள்:

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், மட்டப்பெட்டிக்கு அருகிலுள்ள எடலிமேடு, செவன்மலா, குண்டமலா மற்றும் மீசப்புலி

மலையின் உயரமான பகுதிகள் வரை இந்தப் பூக்கள் பரவும் என்று கேரள வனத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

உள்ளூர் மக்கள் 2025-ஆம் ஆண்டிலேயே சிறிய குறிஞ்சி பூங்கொத்துகளைக் கண்டிருந்தனர். இப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர், பூக்கும் பருவத்துக்கு முன்னதாகத் தோன்றும் இத்தகைய ஆரம்பகாலப் பூக்களை 'கள்ளப் பூ' அல்லது 'போலிப் பூ' என்று அழைக்கின்றனர். எனவே, இந்த ஆண்டு மூணாறுக்குச் செல்லத் திட்டமிடும் சுற்றுலாப் பயணியர் இரவிகுளம் தேசியப் பூங்காவைத் தாண்டி மற்ற இடங்களையும் பார்த்து வேறுபாடுகளைக் கவனிக்கலாம்.

தேவிகுளம் தாலுகாவின் கொட்டகாம்பூர், வட்டவடா கிராமங்களில் உள்ள சுமார் 32 சதுர கி.மீ. புல்வெளி வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்காக 2006-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 'குறிஞ்சிமலை சரணாலயம்', இந்தப் பரந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். இந்த வாழ்விடம் யானைகள், காட்டெருமைகள், அழிந்துவரும் இனமான நீலகிரி வரையாடு உள்ளிட்ட விலங்குகளின் இருப்பிடமாகவும் திகழ்கிறது.

நீலக்குறிஞ்சிப் பூக்கள் வண்ணத்துப் பூச்சிகளையும், தேனீக்களையும் ஈர்க்கின்றன. மலையேற்றப் பயணிகள், பார்வையாளர்கள், குறிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே செல்லவும், குறிஞ்சிப் பூக்களைப் பறிக்கவோ அல்லது மிதிக்கவோ கூடாது என்றும், தங்கள் நெகிழிக் கழிவுகளைத் திரும்ப எடுத்துச் செல்லவும் என வனத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த விதிகளை மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆதிப் பண்பாட்டின் அடையாளமாகவும் பெருமையாகவும் கருதப்படும் குறிஞ்சி மலர்களைக் கொண்டாடுவது நம் கடமை. நீலகிரியில் கோடை விழாக்கள் நடத்துவதைப் போல குறிஞ்சி மலர் விழாக்களை நடத்துவதும், குறிஞ்சி மலர் பற்றிய நினைவுகளை மக்களிடையே பரப்ப நீலகிரியில் அருங்காட்சியகம் ஒன்று அமைப்பதும் காலத்தின் தேவை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.