மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மேற்குத் தொடர்ச்சி மலை குறித்த கஸ்தூரிரங்கன் அறிக்கையை ஏற்க முடியாது! - கர்நாடக முதல்வர்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் அறிக்கையை ஏற்க முடியாது என கர்நாடக அரசு அறிவித்துள்ளது...

DK Shivakumar

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - கோப்புப் படம்

Published On :

மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் அறிக்கையை ஏற்க மாட்டோம் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரிரங்கன் அறிக்கையின் அடிப்படையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் பெரும்பால பகுதிகளைச் சூழல் உணர்திறன் மண்டலம் (பாதுகாக்கப்பட்ட பகுதி) என அறிவிக்கும் மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு ஏற்காது என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இன்று (ஆக. 26) அறிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதம் மேற்கொண்டு தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி பகுதியில், கர்நாடகத்தின் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 33 தாலுக்காக்கள் மற்றும் 1,449 கிராமங்கள் உள்ளடக்கிய 20,668 சதுர கி.மீ. பரப்பளவு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்டதாக அறிவித்தால், அங்குள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம், அடிப்படை உள்கட்டமைப்பு, கட்டுமானம், சாலைகள் மற்றும் சுற்றுலா ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படக் கூடும் என முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றால், எங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம், அவர்களின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சிகள் பாதிக்கப்படக் கூடும். எனவே, இந்த அறிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, இந்த அறிக்கையை கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் தலைமையிலான அமைச்சரவை நிராகரித்துள்ளதாகவும்; ஆனால், அதைக் கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு செயல்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் முதல்வர் சிவகுமார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Karnataka CM DK Shivakumar has stated that they will not accept the Kasturirangan Committee report on the Western Ghats.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.