மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்!

வள்ளுவர் குறளில் கூறிய அரசின் வரிப்பாதிப்புகள்!

Updated On :23 ஜூன் 2024, 11:28 am

சங்க காலப்புலவர்களின் போராட்டக்கள விறுவிறுப்பை என்னென்பது ?

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன். பொருள் (756)

என்ற குறளில் வள்ளுவர் அரசுக்கான வரிப் பொருள் பற்றிக் கூறினாலும், அவ்வரி விதிப்பின் பாதிப்பைப் பற்றிக் கூறும்போது,

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு (552)

நீதி வழங்கும் மன்னன் குடிகளை வருத்தி வரிவாங்குதல் என்பது வழிப்பறிக் கொள்ளைக்குச் சமமாகும் என்றது சிந்தனைக்குரியதாகும்.

பல்வேறு கோரிக்கைகளால் இந்நாளில் வேளாண் மாந்தர்கள் ஆங்காங்கே போராடும் வேளையில், அவர்களது போராட்டம் வாழ்வா? சாவா? என்ற நிலைக்குத் தள்ளப்படும்போது, ஆளும் ஆட்சிக்கான வெற்றி முரசு கொட்ட முடியாது என்பதையும் வள்ளுவர் குறிப்பாக இடனறிதல் என்ற அதிகாரத்தின் குறளால் கூறுவதாக உள்ளதை எண்ணிப் பார்ப்பதும் குறளின் நடப்பியலை நினைப்பிப்பதாக உள்ளனது.

சிறை நலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

உறைநிலத்தோ டொட்ட லரிது. (322)

என்ற குறட்குப் பரிமேலழகர் விசேட உரை கூறுகையில், போராடும் ஆண்மை உடையாரைச் சிறுமை நோக்கி அதாவது எளிமையாய்க் கருதிப் போராட்டத்தை ஒடுக்கினால் போராடுவோர் போராடும் இடத்தைவிட்டுப் போதல் துணிவினரன்றிச் சாதல் துணிவினர் ஆவர் என்பதால் அரசர்க்குப் பெரும்படை உடையுமாம் என்ற எச்சரிக்கை எழுத்து நீள நினைப்பிற்குரியதாம் என்க!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.