மகிழ்ச்சி யாரிடம் உள்ளது?
எப்படி இருக்கீங்க?"' என்று கேட்டுப் பாருங்களேன். சிலர் சொல்கின்ற பதில் "இருக்கிறேன்' "பரவாயில்லை' "ஏதோ இருக்கிறேன்' என்பதாகத்தான் இருக்கும். வேறு சிலர், "நல்லா இருக்கிறேன்' என்று உதட்டளவில் வார்த்தைகள


எப்படி இருக்கீங்க?"' என்று கேட்டுப் பாருங்களேன். சிலர் சொல்கின்ற பதில் "இருக்கிறேன்' "பரவாயில்லை' "ஏதோ இருக்கிறேன்' என்பதாகத்தான் இருக்கும். வேறு சிலர், "நல்லா இருக்கிறேன்' என்று உதட்டளவில் வார்த்தைகளை உதிர்த்துவிட்டு உள்ளத்திலுள்ள உண்மையான உணர்வுகளை மறைப்பதைப் பார்க்கலாம்.
""நல்லா இருக்கிறேன்'' என்ற வார்த்தையே வாடிக்கையாகிப் போன ஒன்றாக மாறிவிட்டதைத்தான் இது நமக்கு உணர்த்துகின்றது.
நீண்ட நாளுக்குப் பின் நமக்கு வேண்டியவர்களைச் சந்திக்கும்போது, வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன்-மகன்-மகள் விடுமுறைக்கு வீட்டிற்கு வரும்போது, உடன் பிறந்தவர்களை, உறவினர்களை, நண்பர்களை சந்திக்கும்போது உள்ளத்தில் மகிழ்ச்சி உற்சாகமாவதைப் பார்க்கலாம். பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும்போது விடுமுறையை எதிர்நோக்கிக் காத்திருப்போம். எதிர்நோக்கிய அந்த நாள் வரும்போது அது அதிக மகிழ்ச்சியைத் தரும். நாம் நினைத்தது நடக்கும் போதும், நாம் எதிர்நோக்கியது நிறைவேறும் போதும் மகிழ்ச்சி இயல்பாக வருகின்றது.
நமது உணர்வுகளை மறைக்காமல் இயல்பாக வெளிப்படுத்தும்போது அதில் சில சவால்கள் உள்ளன. நாம் தவறாக புரிந்துகொள்ளப்படலாம். புறக்கணிக்கப்படலாம். நாம் மனச் சோர்வுக்கு உள்ளாக்கப்படலாம். ஏன், நமது மதிப்பு, மரியாதை கூட உடைக்கப்படலாம். இருந்தாலும் உண்மையானவர்களாக இந்த சோதனைகளைத் துணிவோடு எதிர்கொள்ளும்போதுதான், நமக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கின்றது.
போலியாக இருப்பதைவிட உண்மையாக இரு.
நம்பிக்கையற்று இருப்பதைவிட நம்பிக்கையோடு இரு.
முகமூடி அணிவதை விட இயல்பாக இரு.
அடுத்தவனாக இருப்பதை விட நீயாக இரு.
நீ நீயாக இருக்கும்போது கடவுள் உன்னில் தெரிகிறார்.
மகிழ்ச்சி உன்னில் நிலைத்திருக்கும்.
நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நேர்மையானதாக, உண்மையானதாக, இயல்பானதாக இருக்கும்போது மகிழ்ச்சியாக வாழ முடியும். இந்த மகிழ்ச்சியை நம்மிடமிருந்து யாரும் பிரிக்க முடியாது.
இப்போது சொல்லுங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் மகிழ்ச்சி யாரிடம் உள்ளது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...