விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜெபத்தினால் வரும் பலன்

இந்த உலக வாழ்வில் இறைவன் நமக்குக் கொடுக்கின்ற மிகப் பெரிய ஆசீர்வாதம் நமது குழந்தைகள்தான்! ஏனெனில், "இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்' என்று சங்கீதம் 1

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:39 am

அபி

இந்த உலக வாழ்வில் இறைவன் நமக்குக் கொடுக்கின்ற மிகப் பெரிய ஆசீர்வாதம் நமது குழந்தைகள்தான்! ஏனெனில், "இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்' என்று சங்கீதம் 127:4ல் சொல்லப்பட்டிருக்கிறது.

இது உண்மையிலும் உண்மை! வேதாகமத்தில், பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்தபோது, அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்று இறைவன் அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் பல இடங்களில் நாம் பார்க்கிறோம்.

மிகவும் சீர்கெட்டுப் போயிருக்கின்ற இந்த உலகத்தில், இறைவனின் அறிவுறுத்தலின்படி குழந்தைகளை வளர்க்க நாம் தவறினோமானால், நாம் பெற்ற குழந்தைகளினாலேயே நமக்குத் தலைக்குனிவு ஏற்படும்; இதனால் காலமெல்லாம் நாம் கண்ணீர் வடிக்க நேரிடும்.

தம் வாழ்வில் சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் மேல் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. இதனால் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாக இருக்கவேண்டிய பெற்றோர்களே அவர்களுக்கு சாபத்தைக் கொண்டு வருகிறார்கள்.

"பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான்'- நீதிமொழிகள் 22:6.

பிள்ளைகளை நமக்குக் கொடுப்பது இறைவன். அவருக்குப் பிரியமான விதத்தில் அந்தப் பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்களாகிய நம்முடைய தலையாய கடமையாகும். அதே நேரத்தில் அவசரப்பட்டுக் கடுமையான சொற்களைப் பயன்படுத்திக் குழந்தைகளை கடிந்து கொள்வதையும் இறைவன் விரும்புவதில்லை.

"பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக' -எபேசியர் 6:4.

அடிக்கடி பிள்ளைகளிடத்தில் கோபப்பட்டுக் கடும் சொற்களைப் பயன்படுத்தும்போது அவர்களுடைய மனநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர் மேல் அவர்களுக்கு அன்பு குறைந்துகொண்டே போய்விடுகிறது.

இதனால் அவர்களுடைய அன்பு வேறு பக்கமாகத் திரும்புகிறது. இந்த சந்தர்ப்பத்தைத் தீயவர்கள் பயன்படுத்திக் கொண்டு பலவிதமான பாவங்களுக்குள் நமது பிள்ளைகளை இழுத்துக் கொண்டு போய்விடுகின்றனர். இதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, அன்பு பெற்றோர்களே, கர்த்தர் உங்கள் கைகளில் கொடுத்த விலைமதிக்க முடியாத பொக்கிஷம் உங்கள் பிள்ளைகள்தான். இறைவனின் சித்தத்தின்படி அவர்களை வளர்ப்பதற்கு தேவன் உங்களுக்கு ஞானத்தைத் தர வேண்டும். இதற்காக தினமும் ஜெபம் செய்யுங்கள். உங்கள் ஜெபத்தினால் வரும் பலனை உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் காண்பீர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.