நம்பிக்கை, இயேசுவின் கொடை!
ஆதிகால கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கை அளவிட முடியாதது. நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி,


ஆதிகால கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கை அளவிட முடியாதது. நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி, கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி 11:1). மெசப்பத்தோமியாவில் உள்ள ஊர்(UR) என்னும் ஊரிலிருந்து புறப்பட்டாரே ஆபிரகாம், அது நம்பிக்கை. 90 வயதிலும் தமக்குக் குழந்தை பிறக்கும் என்ற விசுவாசத்துடன் தனது ஒரே மகன் ஈசாக்கை, பலி கொடுக்கத் துணிந்ததும் நம்பிக்கை.
எலியா இறைவாக்கினர், கார்மேல் மலையில் 400 போலி தீர்க்கதரிசிகளை எதிர்த்து நின்ற சவால் ஓர் ஆழமான நம்பிக்கை. கலிலேயக் கடலில் இயேசு நடந்து வந்தபோது, அவரைப் பார்த்து கடல் மீது நடந்து சென்றாரே பேதுரு, அது நம்பிக்கை.
உலகில் உள்ள ஜீவராசிகளை ஜோடிஜோடியாக சேர்த்து, தானும் தன் குடும்பத்தினரும் தப்பிக்க, கட்டாந்தரையில் பெரிய கப்பலை (பேழை - அதஓ ) கட்டினாரே நோவா, அது நம்பிக்கை. எகிப்தில் அரச வாழ்க்கையை விட, மெசியாவின் பொருட்டு இகழ்ச்சியுறுவதே மேலான செல்வம் என்று கருதி தமக்குப் பின்னால் ஆறரை லட்சம் மக்களை அழைத்து, செங்கடலைப் பிளந்து வழி நடத்திய மோசேயின் அசைக்க முடியாத துணிவு ஒரு நம்பிக்கையின் செயல்.
நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்(எபி 12:2). மனிதனுக்கு தம்மைப் படைத்தவர் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்.
பேய் பிடித்திருந்த சிறுவனைக் குணமாக்கிய பொழுது (மத் 17:14-21) சீடர்கள், ""எங்களால் ஏன் பேய் ஓட்ட இயலவில்லை'' என்று கேட்டதற்கு இயேசு, ""உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம்'' என்கிறார். உங்களால் முடியாதது என்று ஒன்றும் இராது எனக் கூறுகிறார். நூற்றுவர் தலைவரின் பணியாள் குணமான பொழுது (லூக்கா 7:1-10) இஸ்ராயேல் மக்களில் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என்கிறார். கானானியப் பெண்ணைப் பார்த்து (மத் 15:28) அம்மா உமது நம்பிக்கை பெரிது எனக் கூறினார்.
இப்படிப் பல நிகழ்வுகளில் தனி மனிதனின் நம்பிக்கை பெரியது எனச் சுட்டிக் காட்டுகிறார்.
மற்றவர்கள் நம்பிக்கையோடு வாழ வேண்டும் எனக் கூறுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை வைப்பதில்லை. ஒரு கழைக்கூத்தாடி ஒரு பெரிய நீர்வீழ்ச்சியின் அருகில் உள்ள இரண்டு குன்றுகளை ஒரு இரும்புக் கம்பியால் இணைத்துக்கொண்டு அதன் மீது தனியாக நடந்து சென்று பல சாகசங்களை செய்வதைப் பார்த்த மக்கள் கரகோஷம் எழுப்பி பாராட்டினார்கள். ஒரு நாளும் அவன் கம்பி மீது நடக்கும் நிகழ்வுகளில் தவறியதேயில்லை.
ஒருநாள் அவன் கம்பி மீது நடக்கும் முன்னர் "யாராவது ஒருவர் உங்களுடைய குழந்தையை என்னிடம் தாருங்கள். நான் குழந்தையைச் சுமந்து, கம்பி மீது நடப்பேன்' என வேண்டினான். குழந்தைகளோடு வந்திருந்தவர்கள் அலறியடித்து ஓடிப்போனார்கள். அவர்கள் கழைக்கூத்தாடியின் சாகச நிகழ்ச்சிகளை ரசித்தார்களே தவிர அவன் மீது நம்பிக்கை கொள்ளவில்லை.
அதுபோலத்தான் நமது மக்களும் வாழ்வில் சோதனைகள் பிறருக்கு ஏற்படும்போது இயேசுவின் மீதும், அன்னை மரியாவின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பார்கள். அதே சோதனை தங்களுக்கு ஏற்படும்போது கிளி ஜோஸ்யம் பார்க்கச் செல்வார்கள். ஒருவர் மற்றவர்மீது கொள்ளும் நம்பிக்கை இயேசுவின் கொடை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...