ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை அறிந்து வணங்குவதற்காகவே அதாவது இபாதத்து செய்வதற்காகவே நான் படைத்துள்ளேன்'' என்று அல்லாஹ் தனது திருமறை குர்ஆன் அத்: 51, வசன எண் 56ல் கூறியுள்ளான். மேலும் "தொழுகையை பேணுதலாகத் தொழுங்கள். முறையாக ஏழை வரி என்ற ஜகாத்தையும் கொடுத்து வாருங்கள்'' என்று அத்: 2, வசன எண் 43ல் அருளியுள்ளான். இது போன்ற வசனங்களை குர்ஆனில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் அல்லாஹ் விளக்கிக் கூறியுள்ளான்.
இவற்றில் இருந்து நம்மைப் படைத்தவனின் நோக்கம் அவனை வழிபட வேண்டும் என்பதே. மேலும் நமக்கு இறைவனின் உதவி தேவை என்றால் ""பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் என்னிடம் கேட்டுப் பெறுங்கள்'' என்று குர் ஆன் அத்:2, 45ல் அருளியுள்ளான்.
"என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக. நன்மையை தீமையை விட்டும் மனிதர்களை விலக்குவாயாக. உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக. நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்'' என்று குர்ஆன் அத்: 31, வசன எண் 17ல் லுக்மான் என்ற அத்யாயத்தில் லுக்மான் நபிகள் தனது மகனுக்கு அறிவுரை கூறியதை அல்லாஹ் விளக்கியுள்ளான்.
ஈமான் கொண்ட மக்களுக்கு ஐந்து வேளைத் தொழுகையை கடமையாக்கித் தந்த அல்லாஹ், தனது அடியார்கள் குறிப்பிட்ட நேர அந்தத் தொழுகையை தினந்தோறும் தவறாமல் நிறைவேற்றி வரும்படி குர்ஆனில் இன்னும் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளான். காரணம், நாளை மறுமைக்குத் தேவையான அதிக நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய அமல் தொழுகை ஒன்றே ஆகும். மேலும் அல்லாஹ்வுக்கு மனித நிலைகளில் மிகவும் விருப்பமான நிலை தொழுகையின் நிலையாகும். அதிலும் "சஜ்தா' என்ற நிலை அதிக விருப்பமானதாகும். காரணம், இந்நிலை உலகில் உள்ள அனைத்தையும் மறந்து அல்லாஹ்வை நினைத்து அவனிடம் தஞ்சம் அடைகின்ற மனிதனின் மனப்பாங்காகும். அதனால் இறைவனின் நெருக்கத்தையும், பொருத்தத்தையும் பெற இயலும். மேலும் தொழுகை என்ற இறை வழிபாடு மனதில் ஓர் எளிமையான வாழ்க்கை முறையினை உதிக்கச் செய்கின்றது. அந்த நிலையினை ஏற்று மனம் ஒருமை அடைந்து அனைத்து நிலைகளிலும் வாழ வழி வகுக்கின்றது.
"தொழுகை என் கண்களுக்கு குளிர்ச்சி, தொழுகை சுவர்க்கத்தின் திறவுகோல்'' என்பது நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளாகும். மேலும் ""நீங்கள் செல்வச் செழிப்போடு வாழும் காலங்களில் இறைவனை நினைத்து வழிபட்டால் நீங்கள் துன்பம் அடையும்பொழுது இறைவன் உங்களை நினைவு கூர்வான். அதாவது அவனது உதவி கிடைக்கும்'' என்பதும் நபிகள் நாயகத்தின் வாக்காகும்.
மேலும், "நாம் தொழுகின்ற ஒவ்வொரு தொழுகையும் அல்லாஹ்வுக்கு நாம் செலுத்துகின்ற நன்றியாகும். நமது இந்த வாழ்க்கையை அல்லாஹ் நாம் கேட்காத நிலையில் நமக்கு எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் கொடுத்தருளியுள்ளான் என்பதில் ஐயமில்லை. அவ்வாறு கிடைத்த இந்த அரிய வாழ்க்கையை இறைவனுக்குப் பிடித்தமான முறையில் நாம் வாழும் பொழுதுதான் நாம் அவனுக்குப் பிடித்தமானவர்களாக ஆக முடியும். அதனைக் கொண்டு மறுமையில் ஈடேற்றம் பெற இயலும்'' என்றும் கூறப்பட்டுள்ளது.
இறைவனுக்கு நன்றி செலுத்துவது பற்றிய ஓர் உருது கவியின் கருத்து இது. ""நாம் நூறு வருடங்கள் முழுமையாக வாழ்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்தினாலும் நாம் முழுமையாக நன்றி செலுத்தியவர்களாக ஆக முடியாது. எனவே நமது அழியப்போகின்ற வாழ்க்கை நிறைவு பெறும் முன் அதிகமாக தொழுது படைத்தவனுக்கு நன்றி செலுத்துவோமாக''.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவையாறு அருகே 11 பம்ப்செட்களில் மின் கம்பிகள் திருட்டு: விவசாயிகள் அவதி
சட்டவிரோதமாக மது விற்ற 2 போ் கைது

வைகை ஆற்றில் ஆகாயத் தாமரைகளை அகற்றி சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானலில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



