விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நல்லெண்ணத்தை வளர்ப்போம்...

எண்ணங்கள் வெறும் சிந்தனைகள், கருத்துக்கள் அல்ல. சிந்தனைகளையும் கருத்துக்களையும் இரவல் வாங்கலாம்.

News image
Updated On :25 ஜூலை 2014, 7:23 am

அபி

எண்ணங்கள் வெறும் சிந்தனைகள், கருத்துக்கள் அல்ல. சிந்தனைகளையும் கருத்துக்களையும் இரவல் வாங்கலாம். ஆனால் சில சிந்தனைகள், கருத்துக்கள் மட்டும் எண்ணங்களாகப் பரிணமித்து, நமது வாழ்வில் மறக்க முடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட எண்ணங்கள்தான் உலக மக்களுடைய ஆற்றலின் ஊற்றாக இருக்கின்றன.

இருபத்தேழு ஆண்டுகள் சிறையிருப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்த நெல்சன் மண்டேலாவைப் பார்த்து அவரது சகாக்கள், ""உம்மை வதைத்த மனிதர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?'' என்று கேட்டனர். ""நாம் அவர்களோடு சேர்ந்து, நமது நாட்டை எப்படிச் சீரமைக்கலாம் என்று சிந்திப்போம்'' என்று பதிலளித்தார் மண்டேலா.

இயேசுபிரான், ஒரு முறை சாத்தானால் அலைக்கழிக்கப்பட்ட ஒருவனை, தனது சொல்லால் அடக்கியபோது, அதனைக் கண்கொண்டு பார்த்த மக்கள் கூட்டம் வியந்தது, அவரைப் போற்றியது.

ஆனால் இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிப்பதற்காக காத்துக்கொண்டிருந்த கற்றவர் கூட்டம், "பேய்கள் தலைவனின் உதவி கொண்டு இந்த மனிதன் பேய் ஓட்டுகிறான்' என்று அவதூறாகக் கூறியது. நல்லெண்ணம் அற்றவர்களாக இருந்தனர் அந்த கற்றவர்கள்.

எண்ணங்கள் தம்மிலேயே நல்லது, கெட்டது என்று பாகுபாடற்றதுதான். அதனை நல்லதாகவும் தீயதாகவும் ஆக்குவது நமது கண்ணோட்டம்தான்.

நல்லதை நல்லதாகக் கணித்துப் பாராட்டுவது நல்லெண்ணம் கொண்டிருத்தலின் அடையாளம். "எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், யாதும் ஊரோ யாவரும் கேளிர், யாவரும் இன்புற்றிருப்பது அல்லாமல் வேரொன்றையும் அறியேன் பராபரனே' என்ற சான்றோரின் மொழிகள் அவர்கள் கொண்டிருந்த நல்லெண்ணத்தை சுட்டிக்காட்டுகின்றன. அவை தான் தனது, வேண்டியவர் வேண்டாதவர், விருப்பு வெறுப்பு, லாபம் நஷ்டம் என்ற பாகுபாட்டை எல்லாம் கடந்த கண்ணோட்டத்தின் வெளிப்பாடுகள்.

இதனை சுட்டிக்காட்டி இயேசுபிரான், "முதலில் உன் கண்ணில் உள்ள விட்டத்தை எடுத்தெறி; பின் பிறர் கண்ணில் உள்ள துரும்பை எடுக்க உனக்கு நன்றாகக் கண்தெரியும்' என்றார்.

தண்ணீர் உள்ள ஒரு குடத்தைப் பார்க்கும் இருவரில் ஒருவர் குடத்தில் பாதி வெறுமையாக உள்ளது என்று கூறுவார். மற்றவர் குடத்தில் பாதியளவு நீர் நிரம்பியிருக்கிறது என்று சொல்லலாம்.

நல்லெண்ணம் என்பது உலகை நல்வழிப்படுத்தவும் பிறரை நேசிக்கவும் உதவ வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.