அன்பால் வெல்லுவோம்!
பழைய ஏற்பாட்டைப் பார்த்தோமானால், கண்ணுக்கு கண், பல்லுக்குப்பல் என்ற சட்டங்கள் இருப்பது தெரிய வரும். பழைய ஏற்பாட்டு காலத்தில் அவை அப்படியே நிறைவேற்றப்பட்டதில்லை.


பழைய ஏற்பாட்டைப் பார்த்தோமானால், கண்ணுக்கு கண், பல்லுக்குப்பல் என்ற சட்டங்கள் இருப்பது தெரிய வரும். பழைய ஏற்பாட்டு காலத்தில் அவை அப்படியே நிறைவேற்றப்பட்டதில்லை.
குற்றம் இழைத்தவருக்கு வெறுமனே தண்டனை கொடுப்பது மட்டும் சட்டமாக இருக்கவில்லை. மாறாக, குற்றம் இழைத்தவர் 5 வகைகளில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு செய்ய வேண்டும்.
காயத்திற்கு, அதனால் ஏற்பட்ட வலிக்கு, மருத்துவச் செலவிற்கு, இந்த காலகட்டத்தில் வேலைக்கு செல்ல முடியாததால் ஏற்படும் இழப்பிற்கு மற்றும் இந்த சமுதாயத்தில் அவர் இழந்த மாண்பிற்கு என இவை அனைத்திற்கு சேர்த்து குற்றம் செய்தவர் இழப்பீடு தர வேண்டும். இந்த அடிப்படையில் நீதியை தழைத்தோங்கச்செய்வதற்காகவே இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
இயேசு இதையும் தாண்டி இன்னும் ஒருபடி மேலே சென்று, மன்னிப்பை முன்னிறுத்துகிறார். அன்பை வெளிப்படுத்த அறிவுறுத்துகிறார்.அன்பு என்பது உணர்வு அல்ல, ஒரு செயல் என்பதைத் திருவிவிலியத்தில் ஆண்டவர் இயேசு அழுத்திச் சொல்கிறார்.
அன்பின் செயல் வடிவங்களில் சிலவற்றை இயேசு நமக்கு எடுத்துக்காட்டாகத் தருகிறார்: தீமை செய்வோரை எதிர்க்க வேண்டாம், அவர்களை அனுமதியுங்கள். உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள விரும்புவோருக்கு, அதைவிட அதிகமாக அளியுங்கள்.
உங்களைக் கட்டாயப்படுத்தி உதவி வேண்டுவோருக்கு இரு மடங்கு செய்யுங்கள். கேட்கிறவர்களுக்கு முகம் கோணாமல் கொடுங்கள்.
நமது சொந்த முயற்சியினால், இயல்பால் இவற்றைச் செய்ய இயலாது. இவை மனித இயல்புக்கும், நியாய உணர்வுக்கும் முரணானவை. இறை அருளால் மட்டுமே, இவற்றைச் செய்ய முடியும். எனவே, தூய ஆவியின் ஆற்றலை நாம் பெறவேண்டும். ஆழமான இறை நம்பிக்கையும் நமக்குத் தேவை.
தீமை செய்வோரிடம் நாம் பணிந்தால், இறைவன் நம்மை மீட்பார், இருப்பதைப் பிறருக்கு அளித்தால், இறைவன் அதைவிட அதிகமாக நமக்குத் தருவார், நமக்கு அநீதி இழைக்கப்படுவதைப் பொறுத்துக்கொண்டால், இறைவன் நீதியை நிலைநாட்டுவார்... இவற்றையெல்லாம் நாம் நம்புகிறோமா?
இறைவனின் இரக்கத்தில், நீதியில், வாக்குப் பிறழாமையில் நமக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறதா? ஆம், என்றால்தான் மேற்கண்டவற்றை நாம் செய்ய முடியும். எனவே, நம் நம்பிக்கையை அதிகரிக்க ஆண்டவரிடமே மன்றாடுவோம்.
எத்தகைய இழப்பையும் அன்பால் மட்டும்தான் இழப்பீடு செய்ய முடியும் என்பது இயேசு நமக்கு வெளிப்படுத்தும் பாடம். அன்பாக இருக்கும் கடவுள் அதையே நமக்கு வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்.
அதையே நமது வாழ்வின் பாடமாக ஏற்று, நல்லமுறையில் மற்றவரை அன்பு செய்து வாழ வரம் வேண்டுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...