விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருவிவிலியம் ஒரு பொக்கிஷம்!

எண்ணற்ற சிந்தனை தீபங்களைக் கொண்ட களஞ்சியமாக திருவிவிலியம் ஒளிர்கின்றது. இறையரசும் யூத அரசும் இங்கு சிந்திக்கப்படுகின்றன.

News image
Updated On :23 மே 2014, 11:42 am

அபி

எண்ணற்ற சிந்தனை தீபங்களைக் கொண்ட களஞ்சியமாக திருவிவிலியம் ஒளிர்கின்றது. இறையரசும் யூத அரசும் இங்கு சிந்திக்கப்படுகின்றன. மதகுருமார்களின் பண்புகளும் சீடர்களின் குணங்களும் குறிக்கப்படுகின்றன. முன்னது வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை! பின்னது நல்ல நிலத்தில் விழுந்த விதை. இலட்சியங்களும் எச்சரிக்கைகளும் சித்திரம் பெறுகின்றன. பாத்திரங்கள் அனைத்துமே இறைஞானம் பெறவேண்டிய வழிகாட்டிகளாகத் திகழ்கின்றன.

அன்பின் வழிகாட்டும் இயேசு..

அடிமையெனத் தாழ்ந்த மரியாள்..

பொறுமையின் வடிவமான சூசை..

கோபத்தின் தீப்பிழம்பாக ஏரோது..

ஆத்திரத்தின் உருவான அன்னாஸ்..

குழப்பமடைந்த பிலாத்து..

மனந்திருந்திய சீமோன்..

முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்த யூதாஸ்..

மெசியாவை அறிவித்த சமாரியப்பெண்..

என பாத்திரங்கள் அனைத்துமே மானுடப் பண்பின் சிந்தனை விருந்து களாகின்றன.

ஞானியரின் காணிக்கை, ஏழைப்பெண்ணின் இரு செப்புகாசுகள், ஐந்து கன்னியர் ஏற்றிய விளக்குகள், வீட்டைப்பெருக்கி கண்டுபிடித்த வெள்ளிக்காசு போன்ற வாழ்வியல் சிந்தனைகளின் குறியீடுகளாக ஒருபுறம்..

சாத்தான் அப்பமாகக் காட்டிய கல், அருளப்பரின் தலை, சாரமற்ற உப்பு, சீமோனின் வாள் போன்ற குறியீடுகள் எடுத்துரைக்கும் எச்சரிக்கை சிந்தனைகள் மறுபுறம் என திருவிவிலியம் கருத்துகளின் களஞ்சியமாகத் திகழ்கின்றது.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு; அழிப்பதற்கல்ல நிறைவேற்றுவதற்கே வந்தேன்; நீதிமான்களையல்ல பாவிகளையே அழைக்க வந்தேன்; பிதாவே இவர்களை மன்னியும் என்ற ஞான மொழிகள் ஆன்மாவிற்கு அமுதூட்டும்..

விளக்குத் தண்டின் மேல் வைத்த விளக்கு, ஆயன் குரல் கேட்ட ஆடு, ஊசியின் காதில் நுழைந்த ஒட்டகம், பாறைமீது கட்டிய வீடு என்பவை திருவிவிலியக் கருத்தோட்டங்கள்.

பகைவனுக்காக மன்றாட்டு, கள்ளனுக்குக் கருணை, தாயிடம் பாசம், உயிருள்ள தண்ணீருக்காக தாகம் ஆகியவை நம்மை நிறைவாழ்வுக்கு இட்டுச் செல்கின்றன.

ஆகவே ஆன்மீகம் பேணுவோர்க்கு திருவிவிலிய சிந்தனை ஓர் இனிய பற்றுக்கோடு.

திருவிவிலியம் ஓர் ஆன்மிக பொக்கிஷம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.