ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை 7 முதல் 8 சதவீதம் வரை அதிகரிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
6 ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் சீன அறிவித்துள்ள மிகக் குறைந்த உயர்வு விகிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சீன நாடாளுமன்ற ஆண்டுக் கூட்டத்துக்கான செய்தித் தொடர்பாளர் ஃபு யிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சீன ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டும் அதிகரிக்கப்படவிருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டுகளைவிடக் குறைவாக, இந்த முறை 7 முதல் 8 சதவீதம் வரை மட்டுமே நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படுகிறது. தெற்கு சீனக் கடல் பகுதியில் அமெரிக்க நடமாட்டம் அதிகரித்திருப்பதால் சீனா தனது ராணுவச் செலவுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பட்ஜெட்டில், ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு 10.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 14,500 கோடி டாலராக (சுமார் ரூ.9.7 லட்சம் கோடி) அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் முதல் முறையாக ஒற்றை இலக்க உயர்வு விகிதத்தை சீனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப் பெரிய ராணுவத்தைக் கொண்ட சீனா, தனது படையிலிருந்து 3 லட்சம் வீரர்களைக் குறைக்கவிருப்பதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவில், ஆண்டுக்கு 45,000 கோடி டாலர்களை (சுமார் ரூ.30 லட்சம் கோடி) ராணுவத்துக்காகச் செலவிட்டு வரும் சீனா, தனது முப்படைகளையும் இதுவரை இல்லாத வேகத்தில் நவீனமயமாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளாக்பஸ்டர் உறுதி! பாராட்டுகளைப் பெறும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்!

மொமினுல் - ஹசன் தமிம் அதிரடி: முதல் நாள் முடிவில் வங்கதேசம் 96 ரன்கள் சேர்ப்பு!

இன்றும், நாளையும் 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
முழு சூரிய கிரகணம்: புகைப்படங்கள்
விடியோக்கள்

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் முன் இருக்கும் WTC சவால்! | Gambhir | IND vs SL |


