கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாருக்கு மீண்டும் கை  கொடுக்கும் சீனா!

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவரான பாகிஸ்தானின் மசூத் அசாருக்கு சர்வதேச தடை விதிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டு உள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2016, 6:14 am

DIN

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவரான பாகிஸ்தானின் மசூத் அசாருக்கு சர்வதேச தடை விதிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டு உள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கம் ஜெய்ஷ்-இ-முகமது. இந்த அமைப்பின் தலைவர்  மசூத் அசார். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களை முன்னெடுத்து வருபவர். பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவராவார். இவரது ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2001-ம் ஆண்டே உலகளாவிய தடை விதித்தது.

ஆனால் அந்த அமைப்பின் தலைவனான மசூத் அசார் மீது தடை விதிக்கும் முடிவை பாதுகாப்பபு கவுன்சிலில் இந்தியா முன்னெடுக்கும் போதெல்லாம், பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா தடைகளை  உண்டாக்கி வருகிறது. தனக்கு இருக்கும் 'வீட்டோ' அதிகாரம் மூலம் சீனா இத்தகைய நடவடிக்கைகளில்  ஈடுபட்டு வருகிறது.

பதான்கோட் விமானப்படை தள தாக்குதலுக்குப் பிறகு மசூத் அசார் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என ஐ.நா. சபையிடம் இந்தியா முறையிட்டது. இதற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் 14 உறுப்பு நாடுகளும்  முழு ஆதரவு தெரிவித்தன. ஆனால் சீனா இதை ஏற்க மறுத்துவிட்டது.

முன்னதாக மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி அப்துல் ரெஹ்மான் லக்வியை பாகிஸ்தான் விடுவித்த போது, பாகிஸ்தானுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவர முயன்றபோதும், சீனா 'வீட்டோ' அதிகாரம் மூலம் தடுத்து நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.