கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

எகிப்தில் ராணுவம் குண்டு வீச்சு: பயங்கரவாதிகள் 100 பேர்  பலி!

எகிப்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்மீது ராணுவம் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் பலியாகினர்.

News image
Updated On :16 அக்டோபர் 2016, 7:18 am

DIN

கெய்ரோ: எகிப்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்மீது ராணுவம் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் பலியாகினர்.

எகிப்தில் சினாய் தீபகற்ப பகுதி ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக உள்ளது. எனவே, அவர்களை ஒழிக்க ராணுவம் தீவிர தொடர் நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இந்த நிலையில் நேற்று வடக்கு சினாஸ் தீபகற்ப பகுதியில் ரபா, ஷேக் ஷூவையத் மற்றும் அல்-அரீஷ் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ராணுவ போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. அதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியாகினர். 40 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் அங்குள்ள துறைமுகம் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அங்கிருந்த பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து குடோன்களும் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த தகவலை எகிப்து ராணுவம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சினாய் பகுதியில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதில் 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கவே  இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்ட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.