புகழ்பெற்ற இணைய சேவை நிறுவனமான யாஹூவில் கணக்கு வைத்திருக்கும் ஐம்பது கோடி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட விபரத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற இணைய சேவை நிறுவனங்களில் யாஹூவும் ஒன்று. இந்நிறுவனம் மூலம் பலர் மின்னஞ்சல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பயனப்டுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நிறுவனத்தில் கணக்கு வைத்திருக்கும் ஐம்பது கோடி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்ற விபரத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
யாஹூவின் தகவல் சேகரிப்பு மையத்தில் இணைய தகவல் திருடர்கள் செய்த தொழில்நுட்ப திருட்டு ஒன்றை விசாரிக்கும் போதுதான் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய பாதுகாப்பபு குறைபாட்டு பிரச்சினையாக கருதப்படும் இதை குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் செய்து இருக்கலாம் என்று யாஹூ கருத்து தெரிவித்துள்ளது.
திருடப்பட்ட தகவல்களில் பயனாளர்களின் கணக்கை சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் பயனாளர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள், பிறந்த தேதி, கடவுச் சொற்கள், மற்றும் பாதுகாப்பு கேள்விகள் மற்றும் பதில்கள் ஆகிய விபரங்கள் அடங்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


