யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடியேற்றவாசிகள் விவகாரம்: பிரிட்டன் உள்துறை அமைச்சர் ராஜிநாமா

குடியேற்றவாசிகளை வெளியேற்றுவது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு தவறான தகவல் அளித்த விவகாரத்தில், பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்பர் ரூட்  தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:36 pm

DIN

குடியேற்றவாசிகளை வெளியேற்றுவது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு தவறான தகவல் அளித்த விவகாரத்தில், பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்பர் ரூட்  தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டனின் தொழிலாளர் தேவையை ஈடுசெய்ய மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் பிரிட்டனுக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரிட்டன் குடியுரிமையும் வழங்கப்பட்டது.
'விண்ட்ரஷ்' என்ற கப்பல் மூலம் அவர்கள் அழைத்து வரப்பட்டதால், அவர்கள் 'விண்ட்ரஷ் தலைமுறையினர்' என்று அழைக்கப்படுகின்றனர்.
பிரிட்டனின் பன்முகத் தன்மையின் அடையாளமாக விண்ட்ரஷ் தலைமுறையினர் கருதப்பட்டாலும், அவர்களது குடியேற்றத்துக்கு பல்வேறு வலதுசாரி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்தச் சூழலில், தற்போதைய பிரிட்டன் பிரதமர் தெரச மே உள்துறை அமைச்சராக இருந்தபோது, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட காமன்வெல்த் நாடுகளிலிருந்து குடியேறியவர்களுக்கு எதிரான கொள்கைகள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, 1973-ஆம் ஆண்டுக்கு முன்னர் பிரிட்டனில் குடியேறிய 'விண்ட்ரஷ்' தலைமுறையினரின் குழந்தைகள், நாட்டில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கான தகுதியை நிரூபிக்கத் தவறினால், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், இதுகுறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் உள்துறை அமைச்சர் அம்பர் ரூட் அளித்த விளக்கத்தில், குடியேற்றவாசிகளை வெளியேற்றுவது தொடர்பாக இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
எனினும், இந்த இலக்கு குறித்த அவரது குறிப்பாணையை பிரிட்டன் ஊடகங்கள் அம்பலப்படுத்தின. அதையடுத்து எழுந்த சர்ச்சை காரணமாக, தனது பதவியை அம்பர் ரூட் ராஜிநாமா செய்தார்.
புதிய உள்துறை அமைச்சராக பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி.
அம்பர் ரூட் ராஜிநாமாவைத் தொடர்ந்து, பிரிட்டன் உள்துறை அமைச்சர் பதவிக்கு பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் ஜாவித் நியமிக்கப்பட்டார். சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பிரிட்டன் அரசின் குடியேற்றவாசிகள் கொள்கை குறித்து சஜித் ஜாவித் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
1973-ஆம் ஆண்டுக்கு முன்னர் குடியேறியவர்களின் குழந்தைகள் தங்களது குடியுரிமை தகுதியை நிரூபிக்க வேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் விதிமுறை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்களையும் பாதிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தச் சூழலில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரை உள்துறை அமைச்சராக பிரதமர் தெரஸா மே நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.