காத்மாண்டு: நேபாளத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக புனித யாத்திரை சென்ற 200 யாத்ரீகர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்திற்கு கைலாச புனித யாத்திரை சென்ற குழுக்களில் இருந்து 200 பேர் மட்டும் சிமிகோட் என்ற பகுதியில் ஏற்பட்ட மோசமான வானிலையின் காரணமாக, அங்குள்ள மலைப்பகுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
நேபாளத்திலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சிக்கியுள்ள யாத்ரீகர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். அத்துடன் அவர்களின் குடும்பத்தினருடமும் தொடர்பில் உள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:
சிமிகோட் பகுதியில் 500 யாத்ரீகர்கள் தங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளன. அங்குள்ள யாத்ரீகர்களுக்கு ஆரம்பகட்ட மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே சிக்கியுள்ள 200 பேர் குறித்து பற்றி அச்சப்படத் தேவையில்லை. வானிலை சீரடைந்த பின்னர்
சிக்கியுள்ள அனைவரையும் விமானங்களை அனுப்பி பாதுகாப்புடன் மீட்டு வருவோம்.
இவ்வாறு தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது







