
கிறிஸ்துமஸ் பண்டிகையை நுகர்வு கலாசாரமாக்க வேண்டாம்: போப் பிரான்சிஸ் வேண்டுகோள்
பொருள்களை வாங்கிக் குவிக்கும் நுகர்வு கலாசாரமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டாம் என்று கிறிஸ்தவ மக்களுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் குழந்தைகள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியை நடத்திய போப் பிரான்சிஸ். நாள்: புதன்கிழமை.
பொருள்களை வாங்கிக் குவிக்கும் நுகர்வு கலாசாரமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டாம் என்று கிறிஸ்தவ மக்களுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகிலேயே அதிகம் பேர் கொண்டாடும் முக்கியப் பண்டிகையான கிறிஸ்துமஸின்போது பல்வேறு பொருள்களின் விற்பனையும் அதிகரிக்கும். முக்கியமாக பரிசுப் பொருள்கள், புத்தாடைகள், கேக் உள்ளிட்ட இனிப்பு வகைகளுக்கு மக்கள் அதிகம் செலவிடுவது வழக்கம். சமீப ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை மிகப்பெரிய விற்பனைத் திருவிழாவாக பெரு நிறுவனங்கள் கருதி அதற்கு ஏற்ப விற்பனை இலக்குகளை நிர்ணயிக்கின்றன.
இந்நிலையில், ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதப் பிரிவின் தலைவரான போப் பிரான்சிஸ் இது தொடர்பாக வாடிகன் சிட்டியில் புதன்கிழமை கூறியதாவது:
பல்வேறு பொருள்களை வாங்கி உங்களுக்குப் பிரியமானவர்களுக்குப் பரிசளித்து அவர்களை வியப்பில் ஆழ்த்துங்கள் என்று விளம்பரங்கள் வந்து குவிகின்றன. ஆனால், இந்த மாதிரியான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத்தான் இறைவன் விரும்புகிறாரா? என்று யோசிக்க வேண்டும். கிறிஸ்துமஸ் பண்டிகையை இத்தகைய நுகர்வு கலாசாரமாக மாற்ற வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். குறைந்தபட்சம் ஒரு ஏழைக்காவது ஆக்கப்பூர்வமாக உதவி செய்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும். நமது சமூகத்தில் எத்தனையோ அநீதிகளும், ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. அவற்றைப் போக்க நம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்ய உறுதி ஏற்க வேண்டும் என்று போப் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




