பாகிஸ்தான் சிறுமி பலாத்காரம், கொலை: இளைஞர் மீது குற்றச்சாட்டு நிரூபணம்
பாகிஸ்தானில் 7 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீதான குற்றச்சாட்டை அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது.


பாகிஸ்தானில் 7 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீதான குற்றச்சாட்டை அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது.
இது குறித்து பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்ட இம்ரான் அலி நக்ஷôபந்தி (23) மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி சஜ்ஜத் அகமது தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், கசூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 5-ஆம் தேதி மாயமான ஜைனப் அன்சாரி, நான்கு நாள்கள் கழித்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அந்தச் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் பிரேத விசாரணையில் தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
அந்தப் பகுதியில் சிறுமிகள் மீதான இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், காவல்துறையினரின் மெத்தனத்தைக் கண்டித்து அந்தப் பகுதியில் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆர்ப்பாட்டத்தின்போது போலீஸார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இந்த நிலையில், தீவிர விசாரணைக்குப் பிறகு முக்கியக் குற்றவாளியான இம்ரான் அலியை போலீஸார் கடந்த மாதம் 23-ஆம் தேதி கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜைனபைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததையும், பிறகு படுகொலை செய்ததையும் இம்ரான் அலி ஒப்புக் கொண்டார். எனினும், அந்தத் தகவலை உறுதி செய்வதற்காக அவரது மரபணு மாதிரியை போலீஸார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், இம்ரான் அலி மீதான குற்றச்சாட்டை பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஜைனப் குடும்பத்தினருக்கு நன்கு அறிமுகமானவரான இம்ரான் அலி, அந்தச் சிறுமியின் வீட்டருகே வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...