2ம் உலகப் போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு: லண்டன் விமான நிலையம் மூடப்பட்டது

2ம் உலகப் போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு: லண்டன் விமான நிலையம் மூடப்பட்டது

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட மிக சக்திவாய்ந்த வெடிகுண்டு, தேம்ஸ் நதிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து லண்டன் நகர விமான நிலையம் மூடப்பட்டது.
Published on


லண்டன்: இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட மிக சக்திவாய்ந்த வெடிகுண்டு, தேம்ஸ் நதிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து லண்டன் நகர விமான நிலையம் மூடப்பட்டது.

லண்டன் நகரின் விமான நிலைய ஓடுபாதைகளிலும் தீவிர சோதனை நடத்துமாறு மன்னர் ஜார்ஜ் வி டோக் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, விமான நிலையம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

லண்டன் விமான நிலையத்தில் தரையிறங்கும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், விமானப் பயணிகள் விமான நிலையத்துக்கு வருகை தருவதை தவிர்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

பிப்ரவரி 12ம் தேதியான இன்று லண்டனில் இருந்து விமானப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தவர்கள், விமான நிறுவனங்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிக்காக பூமியை தோண்டிய போது, மிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை ராயல் விமானப் படை உறுதி செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com