கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அமெரிக்க அதிபரின் மகனுக்கு வெள்ளைப் பொடியுடன் வந்த மர்ம கடிதம்: ஆந்த்ராக்ஸ் பீதியால் பரபரப்பு! 

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகன் ஜுனியர் டிரம்புக்கு, வெள்ளைப் பொடியுடன் வந்த  மர்ம கடிததின்  காரணமாக ஆந்த்ராக்ஸ் பீதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :13 பிப்ரவரி 2018, 12:46 pm

DIN

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகன் ஜுனியர் டிரம்புக்கு, வெள்ளைப் பொடியுடன் வந்த  மர்ம கடிததின்  காரணமாக ஆந்த்ராக்ஸ் பீதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகன் ஜூனியர் டொனால்டு டிரம்ப்.  இவரது மனைவி வனேசா டிரம்ப்.  திங்களன்று ஜுனியர் டிரம்பின் பெயருக்கு அஞ்சல் உறை ஒன்று வந்துள்ளது. அதனை அவரது மனைவி வனேசா வாங்கியுள்ளார்.  பின் அக்கடிதத்தினைப் பிரித்துப் பார்த்த அவர், அதில் வெள்ளை நிறப் பொடி இருந்தது கண்டு ஆச்சர்யமடைந்துளார்.

என்ன என்று தெரியாமல் அந்தப் பொடியை முகர்ந்ததில் வனேசாவுக்கு மயக்கம் வந்துள்ளது.  இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  பின்னர் நடைபெற்ற சோதனையில் அந்த வெள்ளை நிறப் பொடியில் எந்தவித விஷ பொருளும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்  மற்றும் பிரபல நபர்களுக்கு 'ஆந்த்ராக்ஸ்' எனப்படும் வெள்ளை நிற பொடி தடவிய அஞ்சல் உறைகள் அனுப்பப்பட்டன.   இதன் காரணமாக ஐந்து பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.