

ஜோஸ்: நைஜீரியாவில் மேய்ச்சல் நிலம் தொடர்பாக உருவான பயங்கர வன்முறையால் 86 பேர் கொல்லப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
நைஜீரியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது பிளாட்டோ மாகாணம். இங்குள்ள பரிகின் லாடி பகுதியில் இரு இனக் குழுக்களுக்கு இடையில் கடந்த வார இறுதியில் இருந்து மேய்ச்சல் நிலம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
அப்போது ஏற்பட்ட கலவரத்தில் இரு தரப்பிலும் சேர்த்து 86 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 50-க்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் வாகனங்கள் சிலவும் சூறையாடப்பட்டன. கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் மேய்ச்சல் நிலம் தொடர்பாக பாரம்பரிய விவசாய இனக்குழுக்களுக்கும், மேய்ச்சல் தொழில் செய்யும் மற்றொரு இனக்குழுக்களுக்கும் இடையே மோதல்கள் நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.