மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ஹபீஸ் சயீது விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உதவியா?: சீனா மறுப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய பயங்கரவாதி ஹபீஸ் சயீதை வேறு நாட்டுக்கு அனுப்புமாறு பாகிஸ்தானிடம் ஆலோசனை கூறியதாக வெளியான தகவல்களை சீனா மறுத்துள்ளது.

Updated On :25 மே 2018, 1:57 am IST

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய பயங்கரவாதி ஹபீஸ் சயீதை வேறு நாட்டுக்கு அனுப்புமாறு பாகிஸ்தானிடம் ஆலோசனை கூறியதாக வெளியான தகவல்களை சீனா மறுத்துள்ளது.
சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் இடையே பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸியை சந்தித்துப் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், ஹபீஸ் சயீதை மேற்காசிய நாடு ஒன்றுக்கு அனுப்புவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு கேட்டுக் கொண்டார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த செய்தியை 
சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை; இவ்வாறு செய்திகள் வெளியாவது அதிர்ச்சி அளிக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த 6 பேர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். 
இந்தத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீது, தற்போது பாகிஸ்தானில் உள்ளார். 
அவரது அமைப்பை, பயங்கரவாத அமைப்பாக, அமெரிக்க அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு அறிவித்தது. அவரது தலைக்கு 1 கோடி டாலர் வெகுமதி அறிவித்துள்ளது.
ஹபீஸ் சயீது மற்றும் அவரது பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில்தான், அவரை வேறு நாட்டுக்கு அனுப்புமாறு சீனா ஆலோசனை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.