டோரோண்டா: கனடாவின் மிஸ்ஸிசவுகா நகரத்தில் உள்ள இந்திய உணவகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள அந்நாட்டின் ஆறாவது பெரிய நகரம் மிஸ்ஸிசவுகா. இங்கு ”பாம்பே பேல் என்னும் பெயரில் இந்திய உணவகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் வியாழன் இரவு 10.30 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் டோரோண்டா ட்ராயுமா சென்டரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கர சம்பவத்தில் உணவகத்தினுள் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. அதேசமயம் உணவகத்தினுள் குண்டு வைத்தவர்கள் என இருவரின் புகைப்படங்கள் அங்குள்ள சிசிடிவி பதிவில் இருந்து எடுக்கப்பட்டு போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் குண்டு வெடிப்புக்குள்ளான இந்திய உணவகம் தற்பொழுது போலீசாரின் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத்

காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு!

எனது சான்றிதழைக் காட்டுகிறேன், அந்த பேரரசர் தனது டிகிரி சான்றிதழைக் காட்டத் தயாரா? அபிஜீத் தீப்கே

விரைவில் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



