மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்

பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Published On :31 ஜனவரி 2024, 12:40 pm IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வியாழன் அன்று நடைபெற்ற புல்வாமா தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்தியா பாகிஸ்தான் நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முடக்கத்தின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இணையதளத்தை பிறர் தொடர்புகொள்ள முடியாத நிலை நேற்று ஏற்பட்டது.

இந்தியாவே இதன் பின்னணியில் இருப்பதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் குற்றம்சாட்டி செய்திகளை வெளியிட்டன.

இந்நிலையில் இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முஹம்மது பைசல் கூறியுள்ளதாவது:

உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை தொடர்பு கொள்வதில் எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால் ஆஸ்திரேலியா, பிரிட்டன், சவுதி அரேபியா, நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த குறைபாட்டை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.