மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமெரிக்க அதிபர் தேர்தல்: அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 அதிபர் வேட்பாளராக ஜோ பிடனை ஜனநாயகக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தியை பிடன் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். 

News image
Updated On :19 ஆகஸ்ட் 2020, 8:39 am

DIN


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 அதிபர் வேட்பாளராக ஜோ பிடனை ஜனநாயகக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தியை பிடன் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். 

கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக, இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெறவிருந்த வாக்கெடுப்புகள், இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளருக்கான தோ்வில் ஜோ பிடன் வெற்றி பெற்றாா். அவருக்கு ஆதரவாக 79.5 சதவீத வாக்குகள் பதிவாகின. 

இதையடுத்து, நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில், தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சி சாா்பில் ஜோ பிடன் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதியாகியிருந்தது. 

ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக லூசியானாவில் நடைபெற்ற போட்டியிலும் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், விஸ்கான்ஸன் மாகாணத்தில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில், அதிபா் வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரப்பூா்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிடனுக்கு 3,558 பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். 

இந்த செய்தியை பிடன் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ள ஜோ பிடன், “அனைவருக்கும் இதயபூர்வமான நன்றி. அமெரிக்காவின் அதிபருக்கான ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது எனது வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை” என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.