குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் பிரிட்டன் பிரதமர்

2021ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ள உள்ளதாக பிரிட்டன் வெளியுறவு செயலர் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் பிரிட்டன் பிரதமர்
குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் பிரிட்டன் பிரதமர்
Updated on
1 min read

2021ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ள உள்ளதாக பிரிட்டன் வெளியுறவு செயலர் தெரிவித்துள்ளார்.

தில்லி வந்துள்ள பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “அடுத்த ஆண்டு பிரிட்டன் நடத்தும் ஜி7 உச்சி மாநாட்டில் சேர பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியை அழைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

மேலும், “அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பிரதமர் மோடி பிரிட்டன் பிரதமர் ஜான்சனை அழைத்ததை அவர் ஏற்றுக்கொண்டார்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது  இருதரப்பு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு , காலநிலை மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com