கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

2021 தொடக்கத்தில் ஐரோப்பாவில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு

2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

News image
உலக சுகாதார நிறுவனம்
Updated On :16 டிசம்பர் 2020, 12:49 pm

DIN

2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பைத் தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாகியுள்ளது. பல்வேறு நாடுகளில் தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் ஐரோப்பாவின் சில நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எதிர்வரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் மத்தியில் மக்கள் கரோனா தொற்று முன்னெச்சரிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் அலட்சியம் செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.