அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 1.8 கோடியைக் கடந்தது!

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.8 கோடியைக் கடந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,19,000 ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.8 கோடியைக் கடந்துள்ளது. 

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் கரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 18 மில்லியனை(1.8 கோடி) கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 1,80,06,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,19,000 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.91 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருநாளில் 1,534 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் கடந்த வாரம் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com