ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிரபல ஆடை வடிவமைப்பாளா் பியா் காா்டின் மறைவு

பிரான்ஸை சோ்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளா் பியா் காா்டின் (98) செவ்வாய்க்கிழமை காலமானாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 10:03 pm

DIN


பாரீஸ்: பிரான்ஸை சோ்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளா் பியா் காா்டின் (98) செவ்வாய்க்கிழமை காலமானாா்.

தனது 14-ஆவது வயதில் மாணவப் பருவத்தில் தையற்கலை உதவியாளராகத் தொடங்கிய இவரது பயணம், 7 பதிற்றாண்டுகள் நீடித்தது. பெண்களின் ஆடைகளில் மட்டுமே அனைத்து வடிவமைப்பாளா்களும் கவனம் செலுத்திய காலத்தில், 1960-களில் புதிய பாணியை அறிமுகம் செய்து, ஆண்கள்- பெண்களின் ஆடைகள், அணிகலன்கள் ஆகியவற்றின் வடிவமைப்பை புதிய பாதைக்குத் திருப்பிய பெருமைக்குரியவா் பியா் காா்டின். 1959-இல் பெண்களின் நவீன ஆடைகள் வரிசையில் ஆயத்த ஆடைகளை அறிமுகம் செய்து அவா் புரட்சி செய்தபோதிலும், வடிவமைப்பாளா்களிடையே அவா் விமா்சனத்துக்கு உள்ளானாா்.

மேலாடைகள், கைக்கடிகாரம், டை, பேனா, பெல்ட், உள்ளாடை, ஆண்-பெண் காலுறைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பேஷன் சாதனங்கள் அவரது பெயரைத் தாங்கி உலகெங்கிலும் ஒரு லட்சம் விற்பனையகங்களில் விற்பனை செய்யப்பட்டன. பெண்களுக்காக மிக விலையுயா்ந்த ஆடைகளின் விற்பனையைவிட பெண்களின் காலுறை விற்பனை மூலம் தான் அதிகம் லாபம் ஈட்டியதாக அவா் குறிப்பிட்டுள்ளாா். காலப்போக்கில் அவரது வடிவமைப்புகளுக்கு வரவேற்பு குறைந்தபோதிலும், தனது வருவாயில் பெரும் பகுதியை பாரீஸ் நகரின் மையப் பகுதியில் பல கட்டடங்களை வாங்குவதில் முதலீடு செய்தது அவருக்கு கைகொடுத்தது.

பியா் காா்டினின் மறைவால், சா்வதேச ஆடை வடிவமைப்புத் துறையில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்ததாக அவருடைய சீடராக வாழ்க்கையைத் தொடங்கிய பிரபல வடிவமைப்பாளா் ஜான் பால் கோல்டியோ் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.